அல்லு அர்ஜுனா?.. ஜூனியர் என்டிஆரா?.. தமிழ்க் கடவுள் முருகனாக மாறப்போகும் டோலிவுட் நடிகர் யார்?

சென்னை: ராமர், கிருஷ்ணர், அனுமார் கதைகளே அதிகளவில் புராண படங்களாக உருவாகி வெளியாகி வரும் நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முருகக் கடவுளை மையமாக வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை அடுத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறாரா? அல்லது ஜூனியர் என்டிஆர் நடிப்பாரா? என்கிற விவாதம் சோஷியல் மீடியாவில் #GodOfWar என்கிற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

Allu Arjun or Jr NTR who will turn as Lord Muruga for Trivikram s mega biggie God of War

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கங்குவா என வரலாற்று படங்கள் உருவாகி வெளியாகின. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படம் உருவாக காத்திருக்கிறது. ஆனால், கடவுள்களை மையமாக வைத்து சமீப காலமாக பெரிய படங்கள் உருவாகாத நிலையில், தமிழ்க் கடவுள் என கொண்டாடப்படும் முருகக் கடவுளையும் டோலிவுட்டே தட்டித்தூக்க காத்திருக்கிறது.

பெருமாளுக்கு இணையாக முருகனுக்கு: சமீப காலமாக திருப்பதி கோயிலுக்குச் சென்று பெருமாளை வணங்குவதை போல தெலுங்கு மக்கள் அதிகப்படியாக திருத்தணி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். தைப்பூசத்துக்கு எல்லாம் வடபழனி, சிறுவாபுரி கோயில்களே பல கிலோ மீட்டருக்கு க்யூ நின்று முருகனை பக்தர்கள் தரிசித்தனர். அறுபடை வீடுகளின் கூட்டம் அதுக்கும் மேல இருந்தது. பல ஊர்களிலும் மலேசியா முருகனை போல பிரம்மாண்ட முருகன் கோயில்கள் உருவாகி வருகின்றன. தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் முருகக் கடவுளை மையமாக வைத்து பிரம்மாண்ட படத்தை உருவாக்க நினைக்காத நிலையில், தெலுங்கு இயக்குநரான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முருகனை வைத்து பிரம்மாண்ட படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

முருகனாக சூர்யா: அந்த காலத்தில் முருகராக பல படங்களில் சிவகுமார் சூப்பராக நடித்திருப்பார். கந்தன் கருணை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா முருகப் பெருமான் போல வேடமிட்டு பாடல் காட்சியில் நடித்தார். ஆனால், அந்த படத்திற்கும் அந்த பாடலுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் அது கனெக்ட் ஆகவில்லை.

அல்லு அர்ஜுன் தான் முருகர்: அல்லு அர்ஜுனை வைத்து அலா வைகுந்தபுரமுலோ எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம் மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து 'காட் ஆஃப் வார்' என்கிற டைட்டிலில் முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் கதையை படமாக பண்ணப் போகிறார் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆர் தான்: அல்லு அர்ஜுன் அட்லி படத்தில் பிசியாக உள்ள நிலையில், ஜூனியர் என்டிஆர் தான் 'காட் ஆஃப் வார்' படத்தில் முருகனாக நடிக்கப் போகிறார் என்றும் கூடிய சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக போகிறது என ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சண்டைப் போட்டு வருகின்றனர். ஆலியா பட் தான் ஹீரோயின் என்றும் நடிகை குஷ்பு அம்மனாக நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை த்ரிவிக்ரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X