Allu Arjun: என்னோட பொண்ணு 5 வருசமா கிட்டயே வரல.. முத்தம் கொடுக்க முடியல.. அல்லு அர்ஜுன் வேதனை!
மும்பை: நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்தவாரம் அதாவது வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் புஷ்பா 2. தெலுங்கு சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும் அறியப்பட்டு வந்த அல்லு அர்ஜுனை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய படம் புஷ்பா. இந்தப் படத்தினை சுகுமாறன் இயக்க, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர். இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகவுள்ளதால் அதற்கான பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோசனில் அல்லு அர்ஜுன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் அடுத்த பாகம். செம்மரம் கடத்தும் கடத்தல்காரர்களை மையப்படுத்தியவர்களின் கதைக்களத்தை நிஜமாகவே கண் முன் கொண்டுவந்தது படக்குழு. இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. படத்தின் இசை அமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் சிறந்த இசைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே அமைத்தது இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். ஆனால் புஷ்பா 2 படத்திற்கு பாடல்கள் தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கின்றார். ஆனால் பின்னணி இசையினை சாம் சி.எஸ் மற்றும் தமன் அமைத்துள்ளனர். இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளருடன் தேவி ஸ்ரீபிரசாத்திற்கு மோதல் ஏற்பட்டதே காரணம் எனக் கூறப்படுகின்றது.
புஷ்பா 2: படத்தின் ப்ரோமோசன் இந்தியா முழுவதும் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றது. படம் இப்போதே அதாவது ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் பிசினஸ் செய்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், ப்ரீ புக்கிங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் படக்குழுவினர் செம ஹேப்பியாக உள்ளனர். படத்தின் ப்ரோமோசன் மும்பையிலும் நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜுன் பேசும்போது, " புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் நான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செலவு செய்துவிட்டேன். இந்தப் படத்திற்காக நான் தாடி வைக்க வேண்டி இருந்ததால், கடந்த ஐந்து ஆண்டுகளாகவும் நான் தாடியுடன்தான் இருக்கின்றேன்.
வேதனை: இதனால் எனது மகள் என்னிடம் வர மறுக்கின்றாள். அதாவது எனது தாடி குத்தும் என்பதால் எனது மகளை என்னால் முத்தம் கூட வைக்க முடியவில்லை. பலமுறை நான் முத்தம் வைக்க முயற்சி செய்யும்போது எல்லாம், எனது மகள் தாடி குத்துகின்றது எனக் கூறுகின்றார். எனக்கு இது வேதனையாக இருக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை, படத்திற்காக நான் தாடியோடுதான் இருந்தாகவேண்டும்” என பேசினார்.
குடும்பம்: அல்லு அர்ஜுன் இவ்வாறு தனது ரசிகர்கள் முன், தனது வேதனையைப்ம் பகிர்ந்து கொண்டது அவரது ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கடந்த 2011ஆம் ஆண்டு ஷ்னேகா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அயான் என்ற மகனும், அல்லு அர்ஹா என்ற மகளும் உள்ளனர். புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் பெற்றதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











