மாற்றான் கதையை உஷார் பண்ணிட்டாரா அட்லீ?.. அல்லு அர்ஜுனை வைத்து இப்படியொரு முயற்சி பண்ணப்போறாராம்!

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ், புஷ்கர் காயத்ரி, பிரபுதேவா மற்றும் சுதா கொங்கரா என தமிழ் சினிமா இயக்குநர்கள் பலர் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்தாலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை கொடுத்த இயக்குநர் ஷங்கரால் கூட ரசிகர்களை கவரும் படத்தை சமீப காலமாக கொடுக்க முடியவில்லை.

ஆனால், பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1100 கோடி வசூல் சாதனையை அட்லீ அசால்ட்டாக செய்து மிகப்பெரிய சம்பவத்தை செய்துள்ளார். ராஜமெளலி, பிரசாந்த் நீல், சுகுமார் வரிசையில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ள அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Allu Arjun will play twin brothers in Atlee s next buzz goes trending

இந்நிலையில், மாற்றான் படத்தை போல இந்த படம் உருவாகப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது பாலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.

பெயரை மாற்றப் போகிறாரா அல்லு அர்ஜுன்?: புஷ்பா 2 படத்தின் வெற்றியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் சிறைச்சாலைக்கு அல்லு அர்ஜுன் சென்று வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் ஜோசியம் பார்த்ததாகவும் அதன் காரணமாக கூடிய விரைவில் அல்லு அர்ஜுன் தனது பெயரில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ராஜ்குமார் யாதவ் தனது பெயரை ராஜ்குமார் ராவ் என மாற்றிக் கொண்ட நிலையில், பாலிவுட்டில் ஸ்ரீ 2 போன்ற ஹிட் படங்கள் அவருக்கு குவிந்தன. ஆயூஷ்மான் குரானா, நித்யா மேனன் உள்ளிட்டோர் பெயரில் சில ஸ்பெல்லிங் மாற்றங்களை செய்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே ஆஸ்ட்ரோலஜி மீதான நம்பிக்கை தான் காரணம் என்கின்றனர். அதே போல அல்லு அர்ஜுன் பெயரிலும் விரைவில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர்.

Allu Arjun will play twin brothers in Atlee s next buzz goes trending

மாற்றான் கதையை உருவிட்டாரா?: அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த படத்தில் அல்லு அர்ஜுன் அண்ணன், தம்பி என ட்வின்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அட்லீ என்றாலே அவர் அடுத்து எந்த பழைய படத்தை சுட்டு புது படமாக கொடுக்கப் போகிறார் என்கிற கேலியும் கிண்டல்களும் உலாவி வரும் சூழலில் ட்வின்ஸ் என்றதுமே ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் மற்றும் மாற்றான் படங்களில் இருந்து தான் அட்லீ சுடத் தயாராகி விட்டார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

விரைவில் அறிவிப்பு: ஆனால், அல்லு அர்ஜுன் படத்தை அட்லீ பண்ணப் போகிறார் என்பதே இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஏகப்பட்ட தகவல்கள் உலா வரத் தொடங்கியிருக்கின்றன. கூடிய விரைவிலேயே அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடைசியாக அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் அதிகபட்சமாக 1870 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தெலுங்கில் பாகுபலி 2 படத்தின் சாதனையையே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X