நான் பாலிவுட்டின் ரஜினியா?: சல்மான் கான் விளக்கம்
மும்பை: நான் பாலிவுட்டின் ரஜினிகாந்த் எல்லாம் கிடையாது என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி, த்ரிஷா, குஷ்பு நடித்த தெலுங்கு படமான ஸ்டாலினை இந்தியில் ஜெய் ஹோ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சல்மான் கான் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவர் ரஜினிகாந்த் பற்றி பேசினார்.

பாலிவுட்டின் ரஜினி
நடிகர் சல்மான் கான் தான் பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்று கடந்த சில நாட்களாக பேச்சாக கிடக்கிறது. சல்மான் பெல்ட்டை ஆட்டி, கண்ணாடியை அசைத்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று ஆமீர் கான் கூட தெரிவித்திருந்தார்.

ஐ லவ் ரஜினிகாந்த்
சல்மான் கான் ஜெய் ஹோ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது எனக்கு ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். ரஜினியின் பிறந்தநாளான நேற்று சல்மான் பட டிரெய்லர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இல்லீங்க
பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்று தன்னை பற்றி பிறர் பேசுவதை கேள்விப்பட்ட சல்மான் கூறுகையில், நான் ஒன்றும் பாலிவுட்டின் ரஜினி எல்லாம் கிடையாது என்று கூறினார்.

அவர் பக்கத்தில்
ஒரு மனிதனாக அவர் குணங்களுக்கு பக்கத்தில் சென்றால் கூட நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று சல்மான் தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











