Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் இவரா? எஸ்.கேவின் ஸ்கெட்ச் வேற லெவலில் இருக்கே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இப்படம் வரும் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரெய்லர் நேற்று அதாவது அக்டோபர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் ட்ரெய்லர் பார்த்த பலரும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் என்னவென்று இந்தத் தொகுப்பில் காணலாம்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்த கதாநாயகன், மிகப்பெரிய ஸ்டார் என்று கூட சிவகார்த்திகேயனைக் கூறலாம். இவரது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருப்பதால், சிவகார்த்திகேயன் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இவர் குறித்து அஜித் கூறியதாக சிவகார்த்திகேயன் கூறியது, ஏற்புடையதுதான்.

sivakarthikeyan amaran

இயக்குநர்கள்: இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் முடிந்த பின்னர் சிவகார்த்திகேயன் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றவுள்ளார். குறிப்பாக தனது 23ஆம் படத்திற்குப் பின்னர் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற பேச்சு கோட் படத்தின் ரிலீஸின்போது பேசப்பட்டது. அதன்பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜும் விரைவில் இணைந்து படம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

பார்க்கிங்: இதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் பார்க்கிங் படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பாலகிருஷ்ணன் படத்தினை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டும் இல்லமல் இந்தப் படத்தினை சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தினை தயாரித்த சக்தி டாக்கீஸ் இப்படத்தினை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பார்க்கிங் படம் ஹரீஸ் கல்யாண் நடிப்பில் வெளியாகி செம ஹிட் ஆன படம். இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

sivakarthikeyan amaran

அறிவிப்பு: இந்நிலையில் பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அமரன் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் தெரிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் மற்றும் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் என சிவகார்த்திகேயனின் இயக்குநர்கள் வரிசை தரமானதாக உள்ளது என பலர் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X