Ameer:“துரோகி அமீர்.. கருங்காலி பழனியப்பன்” சூர்யா ரசிகர்கள் போஸ்டர்.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்

சென்னை: பருத்திவீரன் விவகாரத்தில் திரை பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக யாரும் பேசாத நிலையில், சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதனிடையே அமீர் குறித்து அவதூறாக பேசியதற்காக ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதனையும் அமீர் தரப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில், சூர்யா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Ameer: Suriya fans poster against Ameer and Karu Palaniappan creates controversy

சூர்யா ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்
அமீரின் பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்தப் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. பருத்திவீரனில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானதால் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால், ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஞானவேல்ராஜா தயாரிப்பில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இந்தப் படத்தை அமீரே சொந்தமாக தயாரித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அமீரை மிரட்டி பருத்திவீரன் படத்தின் ரைட்ஸை ஞானவேல்ராஜா வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பருத்திவீரன் ரிலீஸான பின்னரும் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணத்தை ஞானவேல்ராஜா கொடுக்கவில்லை என அமீர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 16 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமீர் குறித்து ஞானவேல்ராஜா அவதூறாக பேசியிருந்தார். இதற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஞான்வேல்ராஜா சொல்வது பொய் என்றும், அமீருக்கு ஆதரவாகவும் அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு, சேரன், நந்தா பெரியசாமி ஆகியோர் குரல் கொடுத்தனர்.

இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. இருப்பினும் சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அமீருக்கு நியாயம் வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், இந்த விவகாரத்தில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் இன்னும் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக இயக்குநர் கரு பழனியப்பனின் பேட்டி ரொம்பவே வைரலானது.

சூர்யாவும் தொடர்ந்து அமைதி காப்பதை திரை பிரபலங்கள் விரும்பவில்லை. இந்நிலையில், சூர்யா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அடுத்த பஞ்சாயத்தை தொடங்கியுள்ளது. அதாவது "நன்றி கெட்ட துரோகி இயக்குநர் அமீரையும், அமீரின் அல்லக் கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை. சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? - சூர்யா நற்பணி இயக்கம் - நாமக்கல் கிழக்கு மாவட்டம்" என குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X