விவாகரத்து செய்யுங்கள்.. திரிஷாவுடன் இருங்கள்.. ஆனால் தனுஷ் மாதிரி இருங்க.. விஜய்க்கு பறக்கும் அட்வைஸ்

சென்னை: விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் பெரும் பூகம்பத்தையே திரைத்துறையில் கிளப்பியிருக்கிறது. பற்றாக்குறைக்கு இதில் திரிஷாவின் பெயரும் இழுத்து விடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும் சூழலில்; சங்கீதா மீண்டும் நீதிமன்றத்துக்கு சென்று தனக்கான நியாயத்தை கேட்டிருக்கிறார். இன்று தாக்கல் செய்த மனுவில், 'விஜய் என்னை நீலாங்கரை வீட்டுக்குள் விட மறுக்கிறார். எனவே நான் அங்கே தங்குவதற்கு அவர் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருக்கிறார்.

கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. இமான் - மோனிஷா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, சமந்தா - நாக சைதன்யா, ரவி மோகன் - ஆர்த்தி, தனுஷ் - ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு என பல அதிர்ச்சி தரக்கூடிய விவாகரத்துகள் நடந்தன. அந்த லிஸ்ட்டில் இப்போது லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார்கள் விஜய்யும், சங்கீதாவும். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக இருந்த மனஸ்தாபம் பெரிதாகி இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது.

Amid Divorce Row Fans Ask Vijay to Respect Sangeetha Like Dhanush Did with Aishwarya Rajinikanth
Photo Credit:

விஜய் மீது குற்றச்சாட்டு: கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது; என்னை அவர் ஐந்து வருடங்களாக உணர்வு ரீதியாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்' என பல விஷயங்களை கூறி; குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார். அந்த நடிகை திரிஷாவாக இருக்குமோ என ஒருதரப்பினர் சந்தேகப்பட்டனர். அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் திரிஷாவுடன் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார் விஜய்.

கொந்தளித்த ரசிகர்கள்: அவர் இப்படி செய்தது பெரிய அதிர்சியை தவெகவினருக்கே கொடுத்திருக்கிறது. அவருக்கு இதில் முழு ஆதரவையும் கொடுக்க முடியாமல் தர்ம சங்கடமான நிலைமையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சிலரோ இனிமேலும் விஜய்யுடன் பயணித்தால் நமக்கு எதிர்காலம் இருக்காது என்பதை கருதி கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார் சங்கீதா.

சங்கீதாவின் புதிய மனு: அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், "விஜய்யுடன் 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்திருக்கிறேன். குழந்தைகளையும், விஜய்யையும் சிறப்பாகவே கவனித்துக்கொண்டேன். அவரது அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும் பிரிந்து செல்ல மறுக்கிறார். விவாகரத்து மனு தாக்கல் செய்தால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பிரிட்டன் குடியுரிமை இருக்கும் எனக்கு சென்னையில் தனியாக வீடு இல்லை. விவாகரத்து கிடைக்கும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அந்த வீட்டில் நான் தங்க விஜய் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

விஜய்க்கு பறக்கும் அட்வைஸ்: அவரது புதிய மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களும் ஷாக்கை கொடுத்திருக்கிறது. 25 வருடங்கள் வாழ்ந்த ஒருவரை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மறுக்கிறார் என்றால்; இவரெல்லாம் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தார்தான். ஆனால் விவாகரத்து செய்துகொண்ட பிறகும் தங்களுடைய குழந்தைகளுக்காக சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்துகொண்டார்கள். முக்கியமாக நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படத்தின் பூஜை நடந்தது. அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். உடனே தனுஷ் வந்து லைக்கும் போட்டிருக்கிறார்.

என்னதான் பிரிவு ஏற்பட்டுவிட்டாலும்; தன்னுடன் குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்ற ஒருவரை இன்னமும் அவர் மதித்துக்கொண்டுதான் இருக்கிறார். விஜய்யோ அப்படி இல்லை. தளபதி நீங்கள் விவாகரத்து கொடுங்கள்; திரிஷாவோடு இருங்கள். ஆனால் உங்களை நம்பி திருமணம் செய்துகொண்டவரை பிரிந்தாலும் அவருக்கான மரியாதையை கொடுங்கள் என ரசிகர்கள் அட்வைஸ் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X