விஜய்யுடன் சங்கீதா.. தஞ்சாவூர் கூட்டத்தில் நடந்த விஷயம்.. விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்
தஞ்சாவூர்: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஏற்பட்ட பிரச்னை விவாகரத்து வரை வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் ஏகப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் மாதம் இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி இதுகுறித்து விஜய் என்ன பேசப்போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. முக்கியமாக இன்று தஞ்சாவூர் கூட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது பேசுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேசமயம் அவரது ரசிகர் ஒருவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் விஜய் திமுகவை கடுமையாக அட்டாக் செய்துவருகிறார். ஃபுல் ஃபார்மில் அரசியல் களத்தில் சுற்றி சுழல ஆரம்பித்த அவருக்கு; கொஞ்சம் பின்னடைவு தரும் விஷயமாக சங்கீதா விவகாரம் அமைந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், 'விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும்' என மனுத்தாக்கல் செய்து தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பரபரப்பு செய்தியை கொடுத்துவிட்டார்.

செமத்தியான குற்றச்சாட்டுக்கள்: அந்த டைவர்ஸ் மனுவில் எக்கச்சக்க விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவை அனைத்தும் உண்மைதானா; நம்பலாமா என்ற அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துவருகிறார்கள் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும். தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கோபத்தையும், இயலாமையையும் அப்படியே சங்கீதா மீது திருப்பி விட்டிருக்கிறார்கள். அவர் குறித்து கண்டமேனிக்கு தகாத வார்த்தைகளால் பதிவுகள் இட தொடங்கி எல்லை மீறிவிட்டார்கள். அது மேற்கொண்டு விஜய் கட்சி மீது இருக்கும் பிம்பத்தை சுக்கு நூறாக்கியிருக்கிறது.
விஜய்யிடம் எழும் கோரிக்கைகள்: விஜய் - சங்கீதா விவகாரம் வெளியே வந்ததிலிருந்து சோஷியல் மீடியா எங்கும் அதுபற்றிய பேச்சாகத்தான் இருந்தது. அரசியலில் விஜய்யை எதிர்ப்பவர்கள் காலுக்கு சலங்கை கட்டிவிட்டது போல் ஆகிவிட்டது. எதிர் தரப்பினர் அப்படி இருந்தால்; விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் என சொல்லிக்கொண்டு சிலரோ; சங்கீதா பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிவருகிறார். சில பேர் எல்லை மீறி புகைப்படங்களை எல்லாம் தவறாக பயன்படுத்தினார்கள். இப்படி தொடர்ந்து நடப்பதை விஜய் தடுக்க வேண்டும்; அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
தஞ்சை கூட்டம்: இந்த நிலைமையில்தான் இன்று தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். சங்கீதா விவாகரத்து கேட்தற்கு பின்பு நடக்கும் கூட்டம் என்பதால் எப்போதும் இல்லாத அளவுக்கு இது அதீத கவனம் பெற்றது. தனது விவாகரத்து குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வழக்கம்போல் அவர் திமுகவையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து பேசிவிட்டு கிளம்பிவிட்டார். இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் ரசிகர் ஒருவர் செய்த செயல் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன செய்தார்?: அதாவது இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த ரசிகர், விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக இருக்கும் பெரிய புகைப்படத்தை ஏந்தி வந்திருந்தார். அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் உற்சாகத்தில் சத்தம் எழுப்பினார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ, விஜய் - சங்கீதா எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இரண்டு பேரையும் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















