அமீர்கானின் நிர்வாண போஸ்டர் ஒரு கலை!... சொல்வது சித்தார்த்

By Mayura Akilan

சென்னை: ஆமிர்கான் நடித்துவரும் 'பி.கே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பாலிவுட் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கால் நிர்வாண கோலத்தில் காட்சியளித்த ஆமீர்கான் போஸ்டருக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.

இந்த போஸ்டர் குறித்து, 'ரங் தே பஸந்தி' படத்தில் ஆமிர்கானுடன் இணைந்து நடித்த சித்தார்த், கருத்து கூறியுள்ளார்.

படத்தை பாருங்கள்

படத்தை பாருங்கள்

படத்தை பார்த்துவிட்டு அந்த போஸ்டருக்கும் படத்துக்கும் சம்பந்தம் என்னனு தெரிஞ்சிக்கணும்'னு எதிர்ப்பு தெரிவித்த எல்லாரையும் மதித்து ஆமிர்கான் சொல்லியிருக்கார்.

எது ஆபாசம்

எது ஆபாசம்

ஒரு படத்தின் போஸ்டரை வைத்தே, எந்த ஒரு கருத்தையும் சொல்லிவிடக் கூடாது. ஆபாசம்னு பார்த்தால், ஒலிம்பிக்கில் நீச்சல் உடையில்தான் நீந்துகிறார்கள்.

டிவி சேனலில் ஒளிபரப்புறாங்களே

டிவி சேனலில் ஒளிபரப்புறாங்களே

நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஆப்பிரிக்காவில் வாழ்பவர்களை காண்பித்தால் அவங்க நிர்வாணமாகதான் இருப்பார்கள். இதைப் பார்த்து குழந்தைகள் துணியை கழட்டிட்டு ஓடப் போறாங்களா? கருத்து சுதந்திரம் என்பது இதில் ரொம்ப முக்கியம். இது ஒரு கலை சார்ந்தது" என்றார்.

நாட்டை திருத்த வரலை

நாட்டை திருத்த வரலை

"ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு நாட்டை காப்பாற்றி விட முடியாது. நானும் சினிமாவுக்கு நாட்டை திருத்துறவதற்காக வரவில்லை.

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம்

இந்த உலகத்துல எதை வேண்டுமானாலும் குறைக்கப் பார்க்கலாம், ஆனால் கருத்து சுதந்திரத்தை மட்டும் பறிக்க நினைக்கக் கூடாது. அதைச் செதுக்கினாலும் சரி, வெட்டினாலும் சரி அது பறிபோயிடும். அப்புறம் யாருமே சினிமாவே எடுக்க முடியாது.

எதிர்ப்பது நியாயமா?

எதிர்ப்பது நியாயமா?

ஒரு கலைஞனுக்கு, கதாசிரியருக்கு எப்பவுமே கருத்து சுதந்திரம் முக்கியம், சினிமாவோட அடித்தளமே அதுதான். இன்றைக்கு ஒருத்தர் ஒரு விஷயம் சொல்றார்... அதை ஒருத்தர் எதிர்க்கும்போது, சில நாட்களில் யாராலும் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடும்" என்று தனது ஆதங்கத்தைக் வெளிப்படுத்தியுள்ளார் சித்தார்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X