twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் அமிதாப்?

    By Shankar
    |

    Tabu and Amitabh Bachan
    பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை தமிழில் நடிக்க வைக்க எத்தனை இயக்குநர்கள் இதற்கு முன் முயன்றும் முடியாமல் போனது. தனது நெருங்கிய நண்பர்களான ரஜினி, கமல் படங்களில் கூட அவர் நடிக்கவில்லை. எந்திரனில் அவர் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அதுவும் நடக்கவில்லை.

    இந்த நிலையில் இயக்குநர் பாலகிருஷ்ணன் அமிதாப்பை தன் படத்தில் நடிக்க வைக்க மேற்கொண்ட முயற்சியில் ஓரளவு வெற்றி கிட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    காமராஜர், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய அ பாலகிருஷ்ணன் புதிதாக, இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

    இந்தப் படத்தில் நடிக்க அவர் அமிதாப்பை தொடர்பு கொண்டதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

    கதையைக் கேட்ட அமிதாப், தமிழில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்தக் கதைப் பிடித்திருக்கிறது, என்று அமிதாப் கூறினாராம்.

    English summary
    Amitabh Bachan, the Bollywood legend is reportedly accepting to appear in a Tamil movie directed by 'Kamaraj' fame A Balakrishnan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X