அமிதாப் வீடு திரும்பினார்!
மும்பை: மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
1983-ம் அண்டு கூலி படப்பிடிப்பின்போது அமிதாப்புக்கு வயிற்றில் அடிபட்டது. அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார். அப்போது அவர் உயிர்பிழைத்தாலும், அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த 11-ம் தேதியன்று செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என்று டாக்டர்கள் முடிவெடுத்தனர்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்த அவர் வியாழக்கிழமை இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது, அவரின் உடல் நலம் நன்றாக இருக்கும் காரணத்தால் அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












