Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமிதாப்பின் அரசியல் அதிரடி ‘சத்யாகிரஹா’ ஆரம்பம்
தமது அடுத்த படம் சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று அமிதாப் பச்சன் அடிக்கடி சொல்லிவந்தார். இப்போது அந்த எதிர்பார்ப்பிற்குரிய படமான சத்யாகிரஹா தொடங்கியுள்ளது. அரசியல் படமான இதில் வயதான கெட் அப் உடன் வருகிறார் அமிதாப். இந்த படத்தை பிரகாஷ் ஜா இயக்குகிறார்.
பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அதுவும் ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இப்போது, அதே டைரக்டர்-ஹீரோ ஜோடி, சேர்ந்துள்ளனர். 'சத்யாக்கிரஹா' என்ற பெயரோடு அரசியல் படம் எடுப்பதால், சர்ச்சைகள் எழப்போவது உறுதி! என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.
சத்யாகிரஹா படத்தில் அமிதாப் தவிர அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.