அமிதாப்பச்சனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை - நலமுடன் உள்ளார்!
மும்பை: அமிதாப் பச்சனுக்கு இன்று வயிற்றில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் வயிற்று வலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
1983ம் ஆண்டு நடந்த கூலி இந்திப் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் அவருக்கு குடலில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கு அடிபட்ட இடத்தில் வலி ஏற்பட, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் அதே இடத்தில் வலி எடுத்ததால் இன்னொரு முறை சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications