Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்பு எனும் உணர்ச்சி நாயகன்...சுவாரஸ்ய தகவல்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், பன்முக திறமைக்கொண்டவர், உணர்ச்சிவசப்பட்ட மனிதர் என பல பரிமாணங்களைக்கொண்ட சிலம்பரசன் இன்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சில வாசகர் பார்வைக்கு.

மகுடம்
சூடிய
மன்மதன்..
கவுரவ
டாக்டர்
பட்டம்
பெற்ற
சிம்பு..யாருக்கு
டெடிகேட்
பண்ணிருக்கார்
தெரியுமா
?

1980 களில் திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழ் திரையுலகில் 1970 களின் இறுதி 1980 கள் மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். ஸ்டுடியோவில் மட்டுமே இருந்த சினிமாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்ற பாரதிராஜா குழுவினர் வருகை, இளையராஜா எனும் புதிய இசைப்புயல் வருகை, ரஜினி, கமல் எனும் இருபெரும் ஆளுமைகள் தடம் பதித்த காலம் இவைகள் அல்லாமல் கல்லூரி காதலை வித்தியாசமாக வடித்த அஷ்டாவதனி டி.ராஜேந்தர் ( அப்பல்லாம் அவர் டி.ராஜேந்திரன்) கால் பதித்த காலம்.
ஒரு தலை ராகம், ஒருவாரம் கழித்து சூடுபிடித்து பட்டிதொட்டியெங்கும் கலக்கிய பாடல்கள் இளைஞர்களிடையே ஒரு புதிய வரவேற்பை எழுச்சியைப்பெற்றது. ஒரு தலை ராகத்துக்குப்பின் டி.ராஜேந்தரின் அற்புதமான படைப்புகள் எதுவும் சோடைபோனதில்லை. அவரது மகனான சிலம்பரசன் அதே ஆளுமையுடன் அடக்கமாக இருப்பதை காண முடிகிறது.

பன்முக திறமை பெற்ற சிம்பு
தந்தையால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிலம்பரசன் பள்ளி பாடத்துடன் சினிமாவையும் சேர்ந்தே படித்தார். நடிப்பு, இசை, டைரக்ஷன், திரைக்கதை அமைக்கும் திறமை, பாடல்கள் என சிலம்பரசனும் அனைத்து துறைகளிலும் கால்பதித்து பன்முக திறன் பெற்ற நடிகராக இருக்கிறார்.

அம்மா செல்லம் சிம்பு
இன்று டாக்டர் பட்டம் பெற்றவுடன் இந்த நிலையை அடைய உதவியதற்கு தனது தாய், தந்தைக்கு நன்றி என சிலம்பரசன் பதிவிட்டுள்ளார். உண்மையில் சிலம்பரசன் அம்மா செல்லம். அம்மாவிடம் பயப்படும் அவர் அதே நேரம் அனைத்து விஷயங்களையும் அம்மாவிடம்தான் சொல்வாராம். சமயத்தில் அம்மா கையால் சாப்பாடு ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்து சாப்பிடுவாராம்.
தங்கை மகனுடன் விளையாடுவது சிம்புவுக்கு மகிழ்ச்சியான விஷயமாம். உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்கு போய் குறைத்து முற்றிலும் இளமையான தோற்றத்துக்கு மாறிய சிம்பு தற்போது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடத்தை அமைத்து செய்து வருகிறாராம்.

புதுமுக நடிகர்களுக்கு சப்போர்ட்
நிறைய நண்பர்கள் உண்டு. நண்பர்களிடம் போனில் நிறைய நேரம் பேசுவது பிடிக்கும். மனம் திறந்து பேசக்கூடியவர் என தமிழ் சினிமா உலகில் சிம்புவுக்கு பெயர் உண்டு. யாராக இருந்தாலும் மனதில் பட்டதை பேசக்கூடியவர் சிம்பு. புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்கள் நன்றாக செய்திருந்தால் கூப்பிட்டு பாராட்டுவதில், சப்போர்ட் செய்வதில் சிம்பு முதலிடம் என்கிறார்கள்.
வேகமாக டேக் ஓக்கே செய்யும் சிம்பு
காலையில் படபிடிப்பு என்றால் 2 மணிக்குத்தான் வருவார் என்று சினிமா உலகில் சிம்பு பற்றி பேசுவார்கள், ஆனால் 2 மணிக்கு வந்தாலும் அன்றைய முழுக்காட்சியையும் டேக் வாங்காமல் முடித்துக்கொடுப்பதில் சிம்பு வல்லவர் என்பதை யாரும் பதிவு செய்ததில்லை, அவ்வளவு வேகமாக பிசிறில்லாமல் டேக் ஓக்கே ஆகும் என்கின்றனர். அதனால முழு கால்சீட்டையும் முடித்து கொடுத்த திருப்தி படக்குழுவினருக்கு கிடைக்கும் என்கின்றனர்.

அம்மா கையில் கொடுத்துபோடு செல்லக்கண்ணு
படத்தில் நடிப்பதில் வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மா கையில் கொண்டு கொடுத்துவிடும் அம்மா செல்லம். தனக்காக எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார், பிறபடங்களில் பாடுவதில் வரும் வருமானத்தை தனது கைச் செலவுக்கு வைத்துக்கொள்வார் என்கின்றனர்.

சகலகலா வல்லவன்
வீட்டில் சும்மா இருப்பது எப்போதும் சிம்புவுக்கு பிடிக்காத விஷயம், வீட்டில் இருக்கும் நேரங்களில் இசைக்கருவிகளை இசைப்பது, பாடல்களை உருவாக்குவது என்றே நேரம் கழியுமாம். அவ்வாறு பல பாடல்களை ஆல்பம் போடும் அளவுக்கு சிம்பு உருவாக்கி வைத்துள்ளார். சிம்பு அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறன் பெற்றவர்.

படத்தில் ஈடுபாடு காட்டும் சிம்பு
தனது படத்தில் கதைக்கு ஏற்ப பாடல்கள், காட்சிகள், பாடல் கம்போசிங்கில் சிம்பு கட்டாயம் ஈடுபடுவாராம். இயக்குநர் வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொள்வார், இதை சிம்பு தலையிடுகிறார் என சிலர் சொல்லலாம், ஆனால் அவரது ஈடுபாடு காரணமாக பாடல் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது என்கின்றனர்.

இந்த ஆண்டு திருமணம்? படம் இயக்கம்?
பாடல் இசை மட்டுமல்ல, இளம் வயதிலேயே இயக்குநரான சிம்பு, தற்போது மன்மதன் - 2 திரைக்கதையும், இன்னொரு கதையும் தயார் செய்து வைத்துள்ளாராம்.விரைவில் படத்தை இயக்குவார் என்கின்றனர். இதுமட்டுமல்ல சிம்புவுக்காக பெண் பார்க்கும் படலமும் தொடங்கியுள்ளது, பெற்றோர் பார்க்கும் பெண்ணை 2022-க்குள் டும்டும் கொட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

புதிய கார், புதிய பெயர்
சிம்புவின் ஃபேவரைட் வெள்ளை நிற பிஎம்டபில்யூ கார் வைத்திருந்தார். தற்போது பிரிட்டீஷ் ரேசிங் க்ரீன் மினி கூப்பர் கார் வைத்துள்ளார். முன்னர் எஸ்டிஆர் பின்னர் சிலம்பரசன் தற்போது 'ஆத்மன்' சிலம்பரசன் என தன்னை அழைக்க தொடங்கியுள்ளார்.

சிம்பு ராஜ்ஜியம்
பரபரப்பான நடிகர் பிரபல நடிகரின் தீவிர ரசிகராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர், தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துள்ளவர், முக்கிய நடிகர்களில் ஒருவர், மாநாடு போன்று படங்களை தேர்வு செய்து நடித்தால் சிம்பு ராஜியத்துக்கு எந்நாளும் வீழ்ச்சியில்லை.