Arvind Swamy: மாநிலத்தை ஆளக்கூடிய திறமை நடிகர்களுக்கு இருக்கா? அரவிந்த்சாமி கேள்வி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அண்மையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்பதையும் கூறிவிட்டார். இந்த சூழ்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், அரசியலுக்கு வரவுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக அரசியல் கட்சியை தொடங்கி அதனை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதனை அறிக்கையின் மூலம் அறிவித்தார்.

An old video of Arvind Swamy talking about actors entering politics is going trending on social media

அந்த அறிக்கையில் அனைத்து முக்கிய கட்சிகளையும் மறைமுக சாடியிருந்தார் விஜய். மேலும் மாற்று அரசியலை முன்னெடுக்கப் போவதையும் உறுதிப்படுத்தியிருந்தார் விஜய். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தமிழக அரசியல் கட்சியினரும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தனக்கு வரவேற்பு தெரிவித்தவர்களுக்கு தோழர்கள் என குறிப்பிட்டு நேற்று நன்றி அறிக்கையும் வெளியிட்டு இருந்தார் விஜய்.

நடிகர் அரவிந்த்சாமி: இந்த நேரத்தில் நடிகர் அரவிந்த்சாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் நான் ரஜினியின் ரசிகன், கமல், விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதற்காக ஓட்டுபோடமாட்டேன். ஓட்டுப்போடவும் கூடாது, நான் ஓட்டு போட மாட்டேன். அவர்கள் சொல்லும் விஷயத்தில், இந்த சமுதாயத்தை எந்த அளவுக்கு முன்னேற்ற முடியும்? என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும்? அவர்களின் கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என பல வகையிலும் அவர்களின் செயல்பாட்டை கணித்த பிறகே வாக்களிப்பேன்.

மாநிலத்தை ஆளமுடியுமா: அவர்கள் நல்ல நடிகர்கள் அவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறேன் பலரை காப்பாற்றி இருக்கிறேன், அதே போல நிஜவாழ்க்கையிலும் பலரை காப்பாற்றுவேன் என்ற நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், அவர்களால் மாநிலத்தை ஆளக்கூடிய திறன் படைத்தவர்களா? அந்த அளவுக்கு அவர்களின் தகுதி உயர்ந்துவிட்டதா? அவர்கள் இதை செய்ய முடியுமா? என்பதை அவர்களின் அரசியல் நிலைப்பாடு மூலம் புரியவைக்க வேண்டும். அவர்களால் நல்லது செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை அவர்களால் முடியும், எனப் பேசி இருந்தார் நடிகர் அரவிந்த்சாமி. அந்த வீடியோ தற்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் ஒத்துப்போவதால், நெட்டிசன்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X