மத அரசியல் பண்றவனுக்கு ஓட்டு போடாதீங்க..தேர்தல் நேரத்தில், டிரெண்டாகும் விஜய் சேதுபதியின் வீடியோ!
சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூன் 4ஆம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில், அதில் அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே பார்த்து ஓட்டு போடுங்க, தயவு செய்து சிந்தித்து ஓட்டு போடுங்க. நாம் போடுவது ரொம்ப முக்கியம். எப்போதுமே, நம்ம ஊரில் ஒரு பிரச்சனை, நம்ம கல்லூரியில் ஒரு பிரச்சனை, நம்ம பள்ளியில் பிரச்சனை, நம்ம நண்பர்களுக்கு பிரச்சனை, இல்ல நம்ம நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்று கூப்பிடுபவர்களுடன் சேருங்கள்.

பழைய வீடியோ: ஆனால், நம்ம ஜாதிக்கு ஒரு பிரச்சனை, மதத்திற்கு ஒரு பிரச்சனை என்பவர்களுடன் தயவு செய்து சேராதீர்கள். இப்படி சொல்லும் அத்தனை பேரும் நம்மை தூண்டிவிட்டு விட்டு, அவங்க வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க, நம்ம தான் மாட்டிக்கொள்வோம் தயவு செய்து புரிந்து கொண்டு வாக்களிங்கள் என்று பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலருமே விஜய் சேதுபதி மறைமுகமாக பாஜகவை விமர்சித்து பேசுகிறார் என்றெல்லாம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர், அவர் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அவர் பொதுவாக கவனித்து வாக்களிக்க சொன்னார் என்று பேசி வருகின்றனர்.
மாஸ் வில்லன்: தமிழ்சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்சேதுபதி, ஹீரோ ,வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மாஸ் காட்டி வருகிறார். மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த இவர் தொடர்ந்து விக்ரம், ஜவான் என அடுத்தடுத்த படங்களில் நெகட்டிவ் ரோலில் அசத்தி வருகிறார். வில்லனாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் உலக அளவில் கலெக்ஷனை அள்ளியது.
நோ சொன்ன விஜய் சேதுபதி: தொடர்ந்து வில்லன் கதாபாத்திரமே வந்து கொண்டு இருப்பதால்,அது ஒரு கட்டத்தில் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தையே பாதிக்கிறது. வில்லனாக நடிக்க நிறைய பேர் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல அது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை நோக்கி போவதால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து இருப்பதாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











