ரஜினி உடல் நலம்-சிங்கப்பூர் டாக்டர்கள் திருப்தி-பரிசோதனைக்குப் பின் ஷூட்டிங் திரும்புகிறார்

இன்னொரு பக்கம் அவருக்காக மொட்டையடித்தல், கிடா வெட்டு என நேர்த்திக் கடன் நிகழ்ச்சிகள் கனஜோராக நடந்து வருகின்றன.
இப்போது ரஜினியின் உடல்நிலை எப்படி உள்ளது?
அவருக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சமீபத்தில் வந்து ரஜினியைச் சந்தித்து, உடல்நிலையைப் பரிசோதித்துள்ளனர். ஆச்சரியப்படத்தக்க அளவில் அவரது உடல்நிலை வேகமாக முன்னேறிவிட்டதாக மருத்துவர்களே தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, ரஜினி சாப்பிட்டு வந்த மருந்து மாத்திரைகளின் அளவையும் குறைத்துவிட்டார்களாம்.
இந்த மருத்துவர் குழு மீண்டும் ஒரு முறை சென்னை வந்து ரஜினியை சோதித்துப் பார்த்து, மருந்து மாத்திரைகளை நிறுத்திய பிறகே ரஜினி வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ரசிகர்களைச் சந்திப்பது, ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்வது போன்றவற்றுக்கான தேதிகளைத் தருவாராம்.
இதற்கிடையே, நெருங்கிய நண்பர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு தானே போன் செய்து பேசி வருகிறாராம் ரஜினி. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரையும் சந்திக்கிறேன். நேரில் இப்போது வரமுடியவில்லையே என வருத்தம் வேண்டாம் என்று கூறிவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











