டிவிலேயே இருந்தா மூஞ்சி தேய்ந்து போயிடும்.. சொல்ல முடியாத பல அட்வைஸ்..தொகுப்பாளினி டிடியின் பேட்டி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல், விசில், பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக இவர் நடித்த ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இவர் நடிகையாக மட்டுமில்லாமல் சில நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

திடீரென முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டிடி, அதற்காக பல முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும், அவருக்கு கால் வலி சரியாகாததால், பத்து ஆண்டுகளாக வலியோடு அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். இதனால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியிருந்த டிடி, தனது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு திரும்பவும் நிகழ்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கின்றார்.

divyadarshini dd interview

பலவிதமான அட்வைஸ்: நான் டிவில தொகுப்பாளினியாக அறிமுகமாகும், போது எனக்கு 17,18 வயது தான் இருக்கும். அப்போது தான் எனக்கு தோணுச்சு ஆங்கருக்கு என்று தனி ஹேர் ஸ்டைலிஷ்ட் இருக்கக் கூடாதா என்றெல்லாம் பல விஷயங்களை நான் யோசித்து இருக்கிறேன். நான் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது, பலரும் என்னிடம் வந்து, நல்லா பண்றீங்க, உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க ஏன் சினிமாக்கு போகக்கூடாது என்று கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் டிவியில் இருந்தா மூஞ்சி தேஞ்சு போயிடும், அப்புறம் சினிமாவில் வாய்ப்பே இருக்காது என்று பலரும் பலவிதமான அட்வைஸ்களை சொன்னார்கள்.

divyadarshini dd interview

இணையத்தில் ஆக்டிவ்: ஆனால், அந்த நேரம் எனக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை, இருந்தாலும், நான் ரேடியோ,டிவி என பிசியாக இருந்தேன். இப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறேன். ஆனால், அப்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் இப்போது சினிமாவில் இருந்து காணாமலே போய்விட்டார்கள் என்று டிடி அந்த பேட்டியில் பேசி உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து ரசிகர்களை எப்போதும் குஷிப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X