»   »  அடுத்த வருஷம் ஆண்ட்ரியாவுக்கு கல்யாணம்... தலையை ஆட்டியபடி ஆரூடம் சொல்லும் ஜெய்!

அடுத்த வருஷம் ஆண்ட்ரியாவுக்கு கல்யாணம்... தலையை ஆட்டியபடி ஆரூடம் சொல்லும் ஜெய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தன்னுடன் வலியவன் படத்தில் நடிப்பதால் அடுத்த வருடத்திற்குள் நடிகை ஆண்ட்ரியாவிற்கு திருமணம் ஆகி விடலாம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய்.

சென்னை 28, கோவா, சுப்பிரமணிய புரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களைத் தொடர்ந்து ஜெய் தற்போது வலியவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


முன்னதாக ஜெய்யுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை நஸ்ரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது, மற்ற சில நடிகைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.


இதே நிலை ஆண்ட்ரியாவிற்கும் ஏற்படுமா என வார இதழ் ஒன்றிற்கு ஜாலி பேட்டி அளித்துள்ளார் நடிகர் ஜெய். அதில் அவர் கூறியிருப்பதாவது :-


அடுத்து உங்களுக்குத் தான்...

அடுத்து உங்களுக்குத் தான்...

நான் முதல்நாள் அவங்களை ஷூட்டிங்ல பார்த்தப்பவே, ‘எனக்கு ஹீரோயினாயிட்டீங்க... நெக்ஸ்ட் இயர் வருவதற்குள்ள உங்களுக்கு கல்யாணமாகிடும்... அப்படியில்லனா நீங்க தமிழ்நாட்டை விட்டே போயிடுவீங்க பாருங்களேன்னு சொன்னேன்.


லவ் பண்ணனும்...

லவ் பண்ணனும்...

அதற்கு டைரக்டர் சரவணன், ‘அதுக்கு நீங்க ஜெய்யை லவ் பண்ணனும்'னு சொன்னார்.


பார்ட்டில பழக்கம்...

பார்ட்டில பழக்கம்...

ஆண்ட்ரியாவை எனக்கு முன்பே நல்ல பழக்கம். பார்ட்டிகளில் நயன் தாரா, ஆண்ட்ரியா உடன் சிம்பு கலந்து கொள்வார். சிம்புவும் ஆண்ட்ரியாவும் அப்பவே பிரண்ட்ஸ். அவர் மூலமா எனக்கும் பழக்கம்.


எங்கேயும், எப்போதும் பாட்டு...

எங்கேயும், எப்போதும் பாட்டு...

ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் பாடிட்டே இருப்பாங்க. ‘ஹைய்யோ... நொம்ப நல்லா இருக்குங்க. பாடுங்கனு சொன்னா உடனே நிறுத்திடுவாங்க.


செம பிரண்ட்ஸ்...

செம பிரண்ட்ஸ்...

‘இதுவரை... ‘ என்னோட பேவரைட் சாங். அத அவங்க தான் பாடினாங்கனு பின்னாடி தான் தெரிஞ்ஸது. செம பிரண்ட்ஸ் ஆகிட்டோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


English summary
Actor Jai says that actress Andrea will get married next year, as she is acting with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil