அனேகன்... 3 வித கெட்டப்புகளில் தனுஷ்

சென்னை: அனேகன் கதை காதலை மையப் படுத்தி எடுக்கப் பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாக்களில் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக்‌ஷன், திரில்லர், பேமிலி என எந்தவகைப் படமாக இருந்தாலும் அதில் காதலும் இழைந்தோடியே இருக்கும். சில படங்களில் காதல் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், காதல் இல்லாத படங்களைத் தனித்துக் காண்பது அரிதிலும் அரிது.

அந்தவகையில், தனது அனேகன் படமும் காதலை மையப்படுத்தியது தான் எனத் தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த். மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

காதல் கதை...

காதல் கதை...

அனேகன் படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அனேகன் என்ற பெயர் ஒரு தனிமனிதனை குறிப்பிடுவது அல்ல. பல மனிதர்களை உள்ளடக்கியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகத்தை வைத்துத்தான் இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்துள்ளோம்.

3 வித கெட்டப்புகள்...

3 வித கெட்டப்புகள்...

வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

5வது படம்...

5வது படம்...

இப்படத்திற்கு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கே.வி.ஆனந்துக்கு 5-வது படமாகும்.

நவம்பர் ரிலீஸ்...

நவம்பர் ரிலீஸ்...

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் பாடல்களை இம்மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நவம்பரில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X