விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறதா ரஜினியின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Recommended Video

D. IMMAN EXCLUSIVE | OTHER LANGUAGE MUSIC ஏன் பண்றதில்ல ? | FILMIBEAT TAMIL

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு

ரஜினிக்கு உடல்நலக்குறைவு

பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது படக்குழுவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட கடந்த மார்ச் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், 30 நாட்களுக்கு மேலாக தனது காட்சிகளை நடித்து கொடுத்தார்.

படக்குழுவினரிடம் ரஜினி உருக்கம்

படக்குழுவினரிடம் ரஜினி உருக்கம்


கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் படக் குழுவினரிடம் அண்ணாத்த என்னுடைய கடைசி படமாக இருக்கக்கூடாது என உருக்கமாக பேசினார். இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.

மயோ கிளினிக்கில் சிகிச்சை

மயோ கிளினிக்கில் சிகிச்சை

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது.

அண்ணாத்த படத்தின் அப்டேட்

அண்ணாத்த படத்தின் அப்டேட்

பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் படப்பிடிப்பு

கொல்கத்தாவில் படப்பிடிப்பு

அதாவது, சமீபத்தில் படக்குழு ஃபிளாஷ்பேக் காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் மற்றும் குஷ்புவை தவிர மொத்த படக்குழுவும் லக்னோ சென்றனர். ஆனால் அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாததால் படக்குழு கொல்கத்தாவில் எஞ்சிய காட்சிகளை படமாக்கியது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் படக்குழு சென்னை திரும்பியது.

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

ஏற்கனவே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்ற கேப்பில் அதற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் நடந்து முடிந்தது. தற்போது எஞ்சிய காட்சிகளுக்காக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்

அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்

இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த் படம் எமோஷனலாக எல்லோரையும் கனெக்ட் செய்துவிடும் என கூறி பாராட்டியதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியில் ஃபர்ஸ்ட் லுக்

விநாயகர் சதுர்த்தியில் ஃபர்ஸ்ட் லுக்


தீபாவளிக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் மொத்த பணிகளையும் முடிக்கும் பணியில் படக்குழு தீவிரமாக உள்ளது. இதனிடையே வரும் வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X