For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அண்ணாத்த ஒரு டிக்கெட் விலை இவ்வளவா? தீயாய் பறக்கும் ப்ரீ புக்கிங்.. எத்தனை கோடி வசூல் வருமோ?

  |

  சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் உலகம் முழுவதும் சூடு பறக்க நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  கடந்த அக்டோபர் 26ம் தேதி ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்களுக்கு தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

  சூப்பர் ஹீரோ மின்னல் முரளி.... மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது! சூப்பர் ஹீரோ மின்னல் முரளி.... மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது!

  மேலும், ஒரு டிக்கெட்டின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

  ரஜினி படம்

  ரஜினி படம்

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சூரி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

  அட்டகாச டிரைலர்

  அட்டகாச டிரைலர்

  சன் பிக்சர்ஸ் அண்ணாத்த படத்தை பெரிதாக புரமோஷன் செய்யவில்லை என கூறப்பட்டு வந்துள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் டீசர் மற்றும் சமீபத்தில் வெளியான கலர்ஃபுல்லான டிரைலரை பார்த்த ரசிகர்கள் இதுவே ஒரு பெரிய புரமோஷன் தான் என படத்தை பார்த்தே தீர வேண்டும் என டிக்கெட்டுகளை புக் பண்ண தொடங்கி உள்ளனர்.

  சிவகார்த்திகேயன் செய்த வேலை

  சிவகார்த்திகேயன் செய்த வேலை

  இந்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்தால் நினைத்த வசூல் கிடைக்காது என பெரிய இயக்குநர்களும், முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்த ஆண்டுக்கு தங்கள் படங்களை தள்ளி வைத்த நிலையில், சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை ரிலீஸ் செய்து மக்களை தியேட்டர் பக்கம் வரவைத்துள்ளார். ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வழக்கம் போல தியேட்டர்களில் மக்களின் திருவிழாவை கொண்டு வரும் என்பது உறுதியாகி உள்ளது.

  4 நாள் ஹவுஸ்ஃபுல்

  4 நாள் ஹவுஸ்ஃபுல்

  நவம்பர் 4ம் தேதி வியாழக் கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் முதல் 2 நாட்களுக்கு இப்பவே டிக்கெட்டுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் விற்றுத் தீர்ந்து உள்ளன. மேலும், சனி மற்றும் ஞாயிறு வீக்கெண்ட் என்பதால் முதல் 4 நாட்கள் தியேட்டர்கள் 100 சதவீதம் அரங்கு நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Superstar Rajinikanth தற்போதைய உடல்நிலை மருத்துவமனை அறிக்கை
  அண்ணாத்த தீபாவளி

  அண்ணாத்த தீபாவளி

  ரஜினிகாந்த் படம் என்றாலே முதல் நாள் ஷோ முழுவதையும் ரசிகர் மன்றங்களே ஆக்கிரமித்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான். இந்த முறை பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் முழு ஸ்க்ரீனையும் புக் பண்ணி தங்களது தொழிலாளர்களுக்கு அண்ணாத்த தீபாவளியாக கொண்டாட வைக்க திட்டமிட்டு அதற்கான புக்கிங்கில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அமெரிக்காவிலும் ஆர்வம்

  அமெரிக்காவிலும் ஆர்வம்

  அமெரிக்காவிலும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை காண ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும், உலகளவில் பல நாடுகளிலும் அண்ணாத்த திரைப்படம் கணிசமான ஸ்க்ரீன்களில் திரையிடுவதற்கான ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் பல நிறுவனங்களுடன் டை அப் வைத்துக் கொண்டு செய்து வருகிறது.

  ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

  ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

  அதிக பட்சமாக முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட் விலை 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை பிளாக்கில் விற்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எப்படியோ முதல் 4 நாள் அண்ணாத்த திரைப்படம் 100 சதவீத இருக்கைகளுடன் (எக்ஸ்ட்ரா சார் தனிக்கதை) நூறு கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Annatthe Pre Booking sale will create a new record. Theaters are filling fast for Diwali weekend. Rajinikanth’s Annatthe expectation goes high level among fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X