சிவராஜ்குமாருக்கு புற்று நோயா?.. பிரபலம் கிளப்பிய பரபரப்பு.. அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ரசிகர்கள்

பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிவராஜ்குமார். கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்தார். விஜய் நடிக்கும் தளபதி 69 படத்திலும் அவர் நடிப்பதாக இருந்த சூழலில் தான் அதில் நடிக்கவில்லை என்று கூறினார். சூழல் இப்படி இருக்க அவருக்கு ஒரு நோய் இருப்பதாகவும்; அதனால்தான் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியான சூழலில் அவருக்கு வந்திருக்கும் நோய் புற்றுநோய் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்தவர் ராஜ்குமார். அவரைத்தான் வீரப்பன் கடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இரண்டு மகன்களான சிவராஜ்குமாரும், புனித் ராஜ்குமாரும் சாண்டல்வுட்டில் மிகப்பெரிய ஹீரோக்கள். இவர்களில் புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு வந்து உயிரிழந்தார். ஜிம்மில் அதிக நேரம் ஒர்க் அவுட் செய்ததன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

shivarajkumar anthanan

சிவராஜ்குமார் ரூல்: புனித் ராஜ்குமார் போலவே அவரது சகோதரர் சிவராஜ்குமாரும் மிகப்பெரிய நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது படங்களுக்கென்று கர்நாடகாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படம் வெளியானால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ் ஹீரோ என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்ற பெயரையும் சிவராஜ்குமார் பெற்றிருக்கிறார். அது அவரது பேட்டிகளில் பார்த்தாலே தெரியும்.

ஈகோ இல்லாத மனிதர்: அதேபோல் தான் பழகுபவர்களிடம் எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பேசக்கூடியவர் சிவராஜ்குமார். மறைந்த மாபெரும் நடிகர் ரகுவரனின் சகோதரரை சந்தித்து அவருடன் உரையாடிய வீடியோ எல்லாம் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருந்தது. அதேபோல் தமிழ்நாட்டுக்கும் தனக்கும் மிகப்பெரிய பந்தம் இருக்கிறது என்றும் சொல்பவர். அவர் சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில்தான் படித்தார் என்பது கூடுதல் தகவல். அதன் காரணமாகவும் அவர் தமிழர்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

ஜெயிலர், கேப்டன் மில்லர்: தமிழ்நாடு மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் நடிக்காமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க அவரை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் அவரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார். சில சீன்களே வந்தாலும் சிவராஜ்குமாரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் பட்டையை கிளப்பியது. அதேபோல் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர்; விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் நடிப்பதாக இருந்து பிறகு விலகிவிட்டார்.

நோய்தான் காரணம்: சூழல் இப்படி இருக்க சிவராஜ்குமாருக்கு நோய் இருப்பதாகவும் அதற்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அவர், 'எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது என்ன நோய் என்று தெரியவில்லை. அதேசமயம் அது புற்றுநோய் இல்லை. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார். சூழல் இப்படி இருக்க சிவராஜ்குமாருக்கு இருப்பது புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X