Ajith - நண்பரின் இழப்பு.. அஜித் குடியை நிறுத்த காரணம் அவர்தான்.. டாப் சீக்ரெட்டை போட்டுடைத்த பத்திரிகையாளர்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துவருகிறார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அஜித்தின் ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து தற்போது படக்குழு ரெஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்கால இயக்குநர்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து விடாமுயற்சி படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்துகொண்டனர். சூழல் இப்படி இருக்க அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் இன்று அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் ஒன்று ஓடியது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
வெற்றி துரைசாமி மரணம்: இதற்கிடையே அஜித்குமார் நடிப்பது மட்டுமின்றி பைக் ரைடிலும் தீவிர கவனம் செலுத்துபவர். அவருடன் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியும் செல்வது வழக்கம். சூழல் இப்படி இருக்க வேலை காரணமாக இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித்தை நொறுங்கிப்போக செய்திருக்கிறது. தனது நண்பரின் உடலை பார்ப்பதற்கு இன்று சைதை துரைசாமியின் வீட்டுக்கு ஷாலினியுடன் சென்றார்.
அந்தணன் வீடியோ: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "அஜித்தும் வெற்றி துரைசாமியும் நீண்ட கால நண்பர்கள். ஒருவேளை அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்திருக்காவிட்டால் அவரும் வெற்றியுடன் இந்தப் பயணத்தில் இருந்திருப்பார் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இரண்டு பேரும் சேர்ந்து பயணங்களை மேற்கொண்டிருப்பவர்கள். அந்த நட்புக்காகத்தான் அஜித் அதிகாலையிலேயே வெற்றியின் வீட்டுக்கு வந்துவிட்டார். ஷாலினியையும் நாள் முழுக்க வெற்றியின் வீட்டிலேயே இருக்க சொன்னார்.
குடியை நிறுத்த காரணம்: அதேபோல் அஜித்துக்கு இன்னொரு பெரிய இழப்பு என்றால் அது கலை இயக்குநர் மிலனின் உயிரிழப்பு. அதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்து மாலை நேரங்களில் அஜித்தும் மிலனும் பார்ட்டியில் கண்டிப்பாக இருப்பார்கள். அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்துவது என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அந்த மதுவால் மிலன் உயிரிழந்ததால் மிலன் சாவுக்கு பிறகு அஜித் குடிப்பதையே நிறுத்திவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











