லோகேஷ் கால் பண்ணியும் எடுக்கல.. ஸ்ரீ விரைவில் கிடைத்து விடுவார்.. முக்கிய பிரபலம் ஓப்பன் டாக்
சென்னை: கடந்த ஒரு வாரமாக நடிகர் ஸ்ரீ குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில், வழக்கத்திற்க மாறாக அவரது செயல்பாடு இருப்பதாகவும், அது ஸ்ரீயே இல்லை என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஸ்ரீ நடித்த படங்களில் சம்பள பாக்கி மற்றும் வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் இப்படி மாறிவிட்டார் என்றும் ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், முக்கிய பிரபலம் ஸ்ரீ பற்றி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகம் ஆன ஸ்ரீக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து திரை பிரபலங்களும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீ, இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் வந்து என்னிடம கதையை முழுதாக சொல்லிவி்ட்டு இது கனா காணும் காலங்கள் சீரியல் மாதிரி இருக்காதுப்பா ரொம்ப ராவா இருக்கும். முதலில் நீ வந்து ஒரு ஹோட்டலில் சர்வரா வேலை பார்த்துட்டு வா என்று என்னிடம் கூறியதாக ஸ்ரீ தெரிவித்தார். பின்பு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கிளீன் சேவ் செய்து டாக்டராக நடித்தேன். இரண்டு இயக்குநர்களிடமும் வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டேன் என தெரிவி்த்தார்.

ஸ்ரீயின் தோழி கண்ணீர்: ஸ்ரீ குறித்த வீடியோக்கள் தவறான செய்திகள் வெளியானதாக தெரிவித்த அவரது தோழி, ஸ்ரீ அப்படிப்பட்டவன் இல்லை. நான் அவனுடன் பழகியதால் தெரிவிக்கிறேன். அவனுக்கு எது நடந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்வான். ஓ மை கடவுளே படம் ஸ்கிரிப்ட் அவனுக்கு வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மாறிவிட்டது. அதேபோன்று பல படங்கள் வாய்ப்புகள் வந்த போதும் கிடைக்க விடாமல் ஒரு நடிகர் தடுத்ததாகவும் ஸ்ரீயின் தோழி தெரிவித்தார். விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான் என்று தெரிவித்தார். அவனை இந்த நிலையில் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். யார் போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்குறான். நானும் அவனிடம் பேச முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
விளக்கம் தந்த அந்தணன்: ஸ்ரீ குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், இறுகப்பற்று படம் எடுத்துக்கொண்டிருந்த போதே அவருடைய நடவடிக்கை மாறிவிட்டதாக பலரும் சொல்றாங்க. ஏமாற்றம், விரக்தி ஒரு மனிதனை இப்படியெல்லாம் மாற்றும். ஒரு தவறான பாதைக்கு கொண்டு செல்லும். அப்படித்தான் ஸ்ரீயும் போயிட்டார் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். மேலும், ஸ்ரீ வந்து போதை பழக்கம் கிடையாது என அவரது தோழி அண்மையில் தெரிவித்திருந்தார். அவங்க பார்க்கும் போது அப்படி இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது ஒரு வேளை போதைக்கு அடிமையாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது என அந்தணன் கூறியுள்ளார்.

மறுப்பு தெரிவிப்பாரா ஸ்ரீ? : மேலும் ஸ்ரீ குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்திற்கும் அவர் வந்துதான் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அவர் வந்து சொன்னால் தான் சரியாக இருக்கும். ஆனால், ஒரு துன்பத்தை சோகத்தை தாங்க கூடிய மன வலிமை உள்ளவர்கள் சினிமாவிற்குள் வர வேண்டும். ஆனால், அவர் நிறைய இடங்களில் போராடி திரும்பும் பக்கம் எல்லாம் வலியாக இருந்திருக்கிறது. அதுதான் இந்த மாற்றத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால், ஸ்ரீயை மீட்கும் போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போன் செய்தும் ஸ்ரீ எடுக்கவில்லையாம். இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் ஸ்ரீயிடம் பேச முயற்சித்து வருகிறார். ஆனால், போன் ரிங் போனால் எடுக்கவில்லை என்ற தகவல் வருகிறது என அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கடைசியாக நடித்த இறுகப்பற்று படத்தில் அவருக்கு சம்பள பாக்கி என பரவிய செய்தி உண்மை இல்லை. அவர் பேசிய சம்பளத்தை காட்டிலும் கூடுதலாக கொடுத்துள்ளார்கள் என அந்தணன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











