அசோக் செல்வன் பண்ணதுல எந்த தப்பும் இல்லை.. தயாரிப்பாளர் சைடுல தான் தப்பு.. அந்தணன் ஓபன் டாக்!
சென்னை: அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' திரைப்படம் அசோக் செல்வனுக்கு அடுத்த ஹிட் படமாக அமையும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படம் அவருக்குப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அசோக் செல்வன் மற்றும் படத்தில் நடித்த நடிகைகள் பங்கேற்கவே இல்லை.
படத்தின் தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அசோக் செல்வனுக்கு அறிவே இல்லை என்றும் ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே தங்கள் படங்களை புரமோட் செய்து வரும் நிலையில், இவர் வர மாட்டாரா? என பலரும் விளாசினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிங்கம் போஸ்ட் ஒன்றை அசோக் செல்வன் போட்டு திடீரென டெலிட் செய்து விட்டது மேலும், பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. இந்நிலையில், அசோக் செல்வன் மீது எந்தவொரு தவறும் இல்லை என அந்தணன் பேசியுள்ளார்.
போர் தொழில் கொடுத்த வெற்றி: அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படம் வெற்றிப் பெற்றது. உடனடியாக அவருக்கு மறுபடியும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. இந்த ஆண்டு பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் அசோக் செல்வன், வசந்த் ரவி நடித்த பொன் ஒன்று கண்டேன் படம் டைரக்ட்டாக டிவியில் வெளியாகி தோல்வியடைந்தது. இந்நிலையில், அடுத்ததாக எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ளார் அசோக் செல்வன்.

ஆடியோ லாஞ்சுக்கு வரவில்லை: பிட்சா படத்தில் இருந்து பல ஆண்டுகளாக அசோக் செல்வன் நடித்து வந்தாலும், அவருக்கு தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் என ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்துள்ளன. பல படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், அசோக் செல்வன் அதில் பங்கேற்கவில்லை.

அசோக் செல்வனுக்கு திட்டு: பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கு அசோக் செல்வன் வராத நிலையில், படத்தின் தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வனை ஆடியோ வெளியீட்டு விழாவில் திட்டியிருந்தார்.
சம்பள பிரச்சனை: சொன்ன சம்பளத்தை சரியாக தயாரிப்பு தரப்பு கொடுக்கவில்லை என்றும், சம்பளம் கொடுக்காமல் ஹீரோ எப்படி நடிக்க வருவார். ஹீரோவுடன் சண்டைப் போட்டால் எப்படி ஆடியோ லாஞ்சுக்கு வந்து புரமோஷன் செய்வார். அசோக் செல்வன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தான் தவறு உள்ளதாக அந்தணன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

சின்சியரான நடிகர்: அசோக் செல்வன் ரொம்பவே சின்சியரான நடிகர். நடித்துக் கொடுத்த நிலையில், அவருக்கு உரிய சம்பளத்தை சரியாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருந்தால், அடுத்தடுத்த வேலைகளுக்கு அவரே வந்திருப்பார். இதுவரை அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத நிலையில், தற்போது ஏற்படுகிறது என்றால் அவர் தரப்பு நியாயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அந்தணன்.


Click it and Unblock the Notifications











