தனுஷ் அவரை பிரிவதற்கு காரணம் என்ன தெரியுமா?.. டாப் சீக்ரெட் சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: தனுஷ் இப்போது குபேரா, இட்லி கடை படங்களில் நடித்துவருகிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படம் மிக விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்தச் சூழலில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.
தனுஷ் கடைசியாக அவரே இயக்கி நடித்த படம் ராயன். அந்தப் படம் அவரது 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராயன் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும், தனது இயக்கத்திலேயே இட்லி கடை படத்திலும் நடித்துவருகிறார். இரண்டு படங்களின் பணிகளும் முடியும் தருவாயில் இருக்கின்றன. குபேராவில் ராஷ்மிகா மந்தனாவும், இட்லி கடையில் நித்யா மேனனும் ஹீரோயினாக நடிக்கிறார்கள். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

அடுத்த படங்கள்: இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம் ஆகியவைகளில் நடிக்கிறார். இவை மட்டுமின்றி பாலிவுட்டில் ஒரு படமும், ஹாலிவுட்டில் ஒரு படமும் கமிட் செய்திருக்கிறார். இப்படி உச்சக்கட்ட பிஸியாக இருக்கிறார் தனுஷ்.
சிவகார்த்திகேயன், தனுஷ்: இதற்கிடையே சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தது தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 3 படத்தில் சிறிய வேடம் தந்த அவர்; இவரை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். அதுமட்டுமின்றி சிவாவுக்காக வெற்றிமாறனிடம் சென்று உங்கள் துணை இயக்குநர் யாராவது இருந்தால் வந்து கதை சொல்லச்சொல்லுங்கள் என்று கூறியதும் தனுஷ்தான். சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் பேச்சு: எஸ்கேவும் சூரியை வைத்து கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தின் ஒரு விழாவில் பேசிய சிவா, 'எனக்கு வாழ்க்கை கொடுத்ததாக சிலர் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி எப்போதும் வெளியே சொல்லமாட்டேன்’ என்று தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மறைமுகமாக தனுஷைத்தான் சிவகார்த்திகேயன் விமர்சித்திருக்கிறார் என்று ஆணித்தரமாக கூறினார்கள். ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் இரண்டு பேரும் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த ஒரு பேட்டியில், “தனுஷும், சிவகார்த்திகேயனும் நடனமாடியது ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான். பொதுவெளியில் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இதேபோல் சிவகார்த்திகேயனை தனுஷ் அறைந்துவிட்டார் என்று சொல்வதெல்லாம் உச்சக்கட்ட வதந்தி. ஆனால் இரண்டு பேருக்கும் மோதல் இருப்பது உண்மைதான். தன்னுடைய பேனரில் ஒரு படம் செய்யுமாறு தனுஷ் சிவாவிடம் கேட்டார். அப்போது எஸ்கே கேட்ட சம்பளம் தனுஷுக்கு உடன்படவில்லை. அதுதான் அவர்கள் பிரிவதற்கு முதல் காரணம்” என்றார்.


Click it and Unblock the Notifications











