மூத்த நடிகையுடன் கசமுசா.. இணையத்தில் லீக்கான போட்டோ.. துருவ் விக்ரம் இப்படி செய்யலாமா?
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரனுடன் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில், அது உண்மை என்பது போல, இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்று ஆன்லைனில் லீக்காகி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் துருவ் விக்ரம் இப்படி செய்யலாமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
நடிகர் விக்ரமனின் மகனான துருவ் விக்ரம் கிரீசாய இயக்கத்தில் உருவான ஆதித்ய வர்மா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் , இந்தப் படத்தில் துருவ் விக்ரம் மற்றும் மேகா சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை முதலில் பாலா இயக்கினார். அதன்பின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால், பாலா படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு தான், கிரீசாய இயக்கத்தில் ஆதித்ய வர்மா படம் வெளியானது. அதே படம், வர்மா என்ற பெயரில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் பாலா வெளியிட்டார்.
துருவ் விக்ரம்: ஆதித்யா வர்மா படத்தை தொடர்ந்து அப்பாவுடன் சேர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மகான் படம் ஓடிடியில் வெளியான போதும், துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டை பெற்றது. தற்போது, துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். பா ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி மற்றும் அனுராக் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 7 அன்று வெளியிடப்பட்டது. பைசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம், இந்த ஆண்டு இந்த திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த நடிகையுடன் கசமுசா: இந்நிலையில், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரனும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், 'ப்ளூ மூன்' என்ற தலைப்பில் அனுபமா மற்றும் துருவ் ஷேர் செய்த Spotify பிளேலிஸ்ட் இசை ஸ்ட்ரீமிங் தளத்தில் இருவரும் நெருக்கமாக லிப் கிஸ் கொடுத்துக்கொள்ளும் போட்டோ இணையத்தில் வெளியானது. இதைப்பார்த்து இருவரும் காதலிப்பதாக பேச்சுக்கள் பரவியதைத் தொடர்ந்து, Spotify பிளேலிஸ்ட் தனிப்பட்டதாக மாற்றப்பட்டது. துருவ் விக்ரமுக்கு தற்போது 27 வயது ஆகிறது. ஆனால் அனுபமாவுக்கு 29 வயதாகிறது. அவரை விட அனுபமா வயதில் மூத்தவர் என்று தெரியவந்துள்ளது. வளர்ந்து வரம் நேரத்தில் இதுபோன்ற கிசுகிசுவில் சிக்கி பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என இவரது நலம் விரும்பிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
துருவ் விக்ரமின் அப்பா விக்ரம், அருண்குமார் இயக்கத்தில் நடித்த 'வீர தீர சூரன் பார்ட் 2′. கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலர் நடித்திருந்தனர். அசத்தலான நடிப்பும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











