தயவு செய்து பெண்களை விட்டுவிடுங்கள்.. பிராமணர்கள் குறித்த சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கேட்ட நடிகர்!
சென்னை: 'புலே' பட சர்ச்சை நடந்து வரும் நிலையில், பிராமணர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பகிர்ந்து இருந்தார். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அனுராக் காஷ்யப், அவரது குடும்பத்திற்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறி தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குநர் அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள திரைப்படம் புலே. ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு சவால் விட்ட பூலே தம்பதியினரின் புரட்சிகரப் பணிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜோதிராவ் புலேவின் 198வது பிறந்த நாளான ஏப்ரல் 11வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், அகில பாரதிய பிராமண சமாஜ் மற்றும் பரசுராம் ஆர்த்திக் விகாஸ் மகாமண்டல் ஆகிய அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், தணிக்கைக்குழு பிராமிணர்களுக்கு எதிராக இருக்கும் சில கருத்துக்களை மாற்றும்படி படக்குழுவிற்கு பரிந்துரைத்தது. இதனால், புலே படம் திட்டமிட்டபடி 11ந் தேதி வெளியிட முடியாது சூழ்நிலை உருவாகி தயாரிப்பாளர் படத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்தனர். மேலும், படத்தில் ஆட்சேபனைக்குரிய கூறி கருத்துக்கள் இல்லை என மக்களிடம் உரையாடப்பட்டத்தை அடுத்து படம் ஏப்ரல் 25ந் தேதி வெளியாக உள்ளது.

அனுராக் காஷ்யப்: "புலே" பட விவகாரம் இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்த அனுகாக் காஷ்யப். இந்தியாவில் சாதிய அமைப்புகள் இல்லை என்றால் ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே அவர்களை பார்த்து பிராமணர்கள் ஏன் பயப்படுகிறார்கள். படத்தை தணிக்கை குழுவினரை தாண்டி தனிப்பட்ட குழுவினர் படத்தை பார்த்து முடிவு செய்வது நியாயம் இல்லை. இங்கு சிஸ்டமே தவறாக இருக்கிறது. சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆனீர்கள்? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி. அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள் இந்தியாவில் சாதி இருக்கா.. இல்லையா என பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவினைத் தொடர்ந்து பலர், இணையத்தில் கேள்வி கேட்டு வந்ததால் கடுப்பான அனுராக் காஷ்யப், "நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் உனக்கென்ன பிரச்சனை" என்று பதிவிட்டு இருந்தார்.

பெண்களை விட்டுவிடுங்கள்: இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது அனுராக் காஷ்யப் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், இந்த மன்னிப்பு "எனது பதிவுக்காக அல்ல, ஆனால், அந்த ஒரு வரியில் இருந்த வெறுப்புக்காக. மகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் வந்ததால் கேட்கிறேன். நீங்கள் தேடுவது மன்னிப்பு என்றால், இது எனது மன்னிப்பு. பிராமணர்களே, தயவுசெய்து பெண்களை விட்டுவிடுங்கள், வேதங்கள் கூட கண்ணியத்தைக் கற்பிக்கின்றன, நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்ட பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, நான் மன்னிப்பு கேட்கிறேன் என அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரான அனுராக் காஷ்யப் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மேலும், லியோ படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











