கதைப் பிரச்னை.. விஜய் படத்தில் இருந்து திடீரென விலகினார் ஏஆர் முருகதாஸ்.. அடுத்த இயக்குனர் யார்?

By

சென்னை: கதையில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து விஜய் படத்தில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியுள்ளார்.

விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

முதலில் பாண்டிராஜ்

முதலில் பாண்டிராஜ்

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று பேசப்பட்டு வந்தது. முதலில் பாண்டிராஜ் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்து மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகக் கூறப்பட்டன. அடுத்து சுதா கொங்கரா இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

துப்பாக்கி 2ஆம் பாகம்

துப்பாக்கி 2ஆம் பாகம்

பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாகக் கூறப்பட்டது. விஜய்க்காக அவர் கதையை உருவாக்கி வந்ததாகவும் அது, சூப்பர் ஹிட் படமான துப்பாக்கியின் அடுத்த பாகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

கதைப் பிடிக்கலை

கதைப் பிடிக்கலை

முருகதாஸ் உருவாக்கிய கதை விஜய்க்குப் பிடிக்கவில்லை என்றும் கதையை இரண்டு மூன்று முறை மாற்றியும் அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதுபற்றி விசாரித்தபோது, உண்மைதான் என்பதை சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்க இருந்தது.

சம்பள பிரச்னை

சம்பள பிரச்னை

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருந்தார். படம் தொடங்க இருக்கும்போதே, விஜய்க்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சம்பள பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு எந்த இயக்குனர் விஜய்யை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X