தனுஷ் குறித்து பாராட்டு... அட்ராங்கி ரே பாடல் குறித்து இசைப்புயல் அப்டேட்
மும்பை : நடிகர் தனுஷ் ஆனந்த் எல் ராய் இணைந்துள்ள அட்ராங்கி ரே படம் வரும் 24ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ் தற்போது இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அட்ராங்கி ரே படத்தின் பாடல் குறித்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ்
நடிகர் தனுஷ் கடந்த 2013ல் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் சிற்பபான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

அட்ராங்கி ரே படம்
இந்தப் படத்தில் வாய் பேச முடியாத கலைஞனாக நடித்திருந்தார் தனுஷ். இந்த இரு படங்களும் தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அக்ஷய், சாராவுடன் தனுஷ்
இந்தப் படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 24ம் தேதி கிறிஸ்துமஸையொட்டி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ட்ரெயிலர் வெளியீடு
படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இதில் தனுஷ் தமிழிலும் பேசியுள்ளார். அவரையொட்டியே ட்ரெயிலர் அமைந்துள்ளது. படத்தில் சாரா அலிகானை வலுக்கட்டாயமாக தனுஷிற்கு திருமணம் செய்து வைப்பதாக காணப்படுகிறது.

முக்கோண காதல்
சாராவின் காதலராக படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். முக்கோண காதல் கதையாக அட்ராங்கி ரே படம் அமைந்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். அவரது இசை படத்தை தாங்கிப் பிடித்துள்ளது ட்ரெயிலரிலேயே தெரிகிறது.
Recommended Video

இசைப்புயல் அப்டேட்
இந்நிலையில் படத்தின் லிட்டில் லிட்டில் பாடல் நாளைய தினம் வெளியாக உள்ளதாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது ட்விடடர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதன் ப்ரமோவும் ரிலீசாகியுள்ளது. அநதப் ப்ரமோவில் தனுஷ் சிறப்பாக காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











