ஹீரோ .. ஹீரோ ..
கன்னிப் பெண்களின் முன்னாள் கனவுக் கண்ணன் அரவிந்தசாமி மீண்டும் நடிக்கிறார். தமிழில் அல்லமலையாளத்தில்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த அரவிந்தசாமி திடீரென்று காணாமல் போய் விட்டார்.இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தனது மேனேஜ்மென்ட் கன்சல்டன்சிபிஸினசில் தீவிரம் காட்டி வந்தார். இதனால் நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருந்தார்.
இந் நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். கினாவு (கனவு என்று அர்த்தம்) என்றமலையாளப் படத்தில் அவர் நடித்து வருகிறாராம். இந்தப் படம் சக்சஸ் ஆனால் தொடர்ந்து நடிக்கமுடிவு செய்துள்ளாராம்.
திடீரென அவர் நடிக்க வந்தது ஏன் என்று தெரியவில்லை.
இனிது இனிது"சிம்ரன்"இனிது!
கடல் கன்னி வேடத்தில் தோன்றி ரசிகர்களை கிளுகிளுப்புக் கடலில் மிதக்கவிட வருகிறார் சிம்ரன்.
இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் தான் சிம்ரனின் இந்தடுஞீ கவர்ச்சி வெள்ளம் பொங்கப் போகிறது. ஒருபாடல் காட்சியில் மட்டும் நடிக்கும் சிம்ரனுக்காக கவர்ச்சி தெரிக்க உடையைத் தயார் செய்த இயக்குனர் கொஞ்சம்பயத்துடன் தான் அவரிடம் காட்டினாராம்.
இந்த டிரஸ்சுக்கு என்ன, எனக்கு ஓ.கே. என்று கூறி விட்ட சிம்ஸ் அதை அசால்டாக அணிந்து வந்து நின்று சூட்டிங்ஸ்பாட்டில் எல்லோரையும் நெளிய வைத்தாராம்.
சிம்ரனும், ஹீரோ ஜெய் ஆகாஷும் இந்தப் பாடல் காட்சியில் கட்டிப் பிடித்து, உருண்டு புரண்டுநடித்திருக்கிறார்கள். மகாபலிபுரம் அருகே இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











