ஹீரோ .. ஹீரோ ..
அர்ஜூனுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.
வரிசையாக படங்கள் அடி வாங்கி வருவது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அவருக்கும் டைரக்டர் ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால்,படமே டிராப் ஆகி விட்ட து.
அன்பாலயா பிரபாகரன் தயாரிக்க இருந்து அர்ஜூன் நடிக்க இருந்த படம் சாணக்யா. இதை மலையாளடைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்குவதாக இருந்தது. இப்போது படம் டிராப் ஆகி விட்டதாம்.
படத்தின் கதையில் அவ்வப்போது மாற்றம் செய்யச் சொல்லி அர்ஜூன் குறுக்கிட்டதாலும், டைரக்ஷன் பணியில்குறுக்கிட்டு வந்ததாலும் அதிருப்தி அடைந்த ஷாஜி, பிரபாகரனைப் பார்த்து சாடீஞூ சொல்லி விட்டு போய்விட்டாராம்.
வெறுத்துப் போன அர்ஜூன் இப்போது அதே கால்ஷீட்டில் வேறு ஒரு படத்தை அன்பாலயாவுக்காக பண்ணிக்கொடுக்கப் போகிறாராம். அனேகமாக இதை அவரே இயக்கக் கூடுமாம்.
தனது மார்க்கெட் சரியும்போதெல்லாம் தானே படத்தை டைரக்ட் செய்வது அர்ஜூனின் வழக்கம். தனது தாய்மொழியானகன்னடத்தில் இவரே படங்களைத் தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் தமிழில் அவர் இயக்கிய வேதமும், ஏழுமலையும் ஊத்திக்கொண்டன.
இருந்தாலும் மக்களை அவர் விடுவதாக இல்லை போலும்.


Click it and Unblock the Notifications











