முதல் முறையாக புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அர்ஜூன்!
இதுவரை போலீஸ் அதிகாரி அல்லது ராணுவ அதிகாரியாக நடித்து வந்த அர்ஜுன், முதன்முறையாக புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அருண் வைத்தியநாதன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ஜுனுடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதுவரை வெளிவந்த போலீஸ் கதையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக புலனாய்வு துறையினை மையமாக கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு விறுவிறுப்பு மிக்க ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தை பேஷன் பிலிம் பேக்டரி சார்பாக உமேஷ், ஜெயராம் மற்றும் சுதன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கி தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











