படுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட கத்ரீனா: பொசுக்குன்னு அசிங்கப்படுத்திய ஹீரோ
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட அதை பார்த்த அர்ஜுன் கபூர் அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் கெரியர் தற்போது மீண்டும் பிக்கப்பாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கெரியர் பிக்கப் ஆக உதவியவர் வேறு யாரும் அல்ல சல்மான் கான் தான்.
இந்நிலையில் கத்ரீனா இன்ஸ்டாகிராமில் தனது படுகவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கத்ரீனா
கத்ரீனா தனது இடுப்பு தெரியும்படி உடை அணிந்து வெள்ளை நிற பவுடரை தூவியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

கலாய்
கத்ரீனாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாட், செக்ஸி, அழகு என்று பாராட்ட பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரோ உங்களுக்கு பொடுகு வந்துவிட்டதா கத்ரீனா என்று கேட்டு கலாய்த்துள்ளார்.
வீடியோ
கத்ரீனா வெள்ளை நிற பவுடரை தூவிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த உடை தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிண்டல்
பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் அர்ஜுன் கபூர் சேர்ந்தாலே கத்ரீனா கைஃபை கலாய்ப்பதை ஒரு வேலையாக வைத்துள்ளனர். வருண் தவானும், கத்ரீனாவும் சேர்ந்து நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











