முதலமைச்சர் விஜய்யை சந்தித்த முதல்வன் அர்ஜுன்.. ரொம்ப உருகிருக்காரே ப்பா!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சியமைத்தார் என்ற விமர்சனங்கள் வந்தாலும்; சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பிவிட்டதால் இனிமேல் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க தங்கள் துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பதை அடுத்து திரைத்துறையினரும் அடுத்தடுத்த சந்திப்புகளை நிகழ்த்திவருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது பெரும்பாலானோர் நினைத்தது, 'இதெல்லாம் நிஜமா இல்லை கனவா?' என்பதுதான். ஏனெனில் விஜய்யின் கட்சியால் பத்து தொகுதிகளைகூட கைப்பற்ற முடியாது என்று பலரும் குறைத்து மதிப்பிட்டிருந்த நிலைமையில்; அத்தனை கணிப்புகளையும் தகர்த்தெறிந்து மொத்தம் அக்கட்சி 108 தொகுதிகளில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் வழங்கின. மேலும் அதிமுகவிலிருந்து 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் தங்கள் சப்போர்ட்டை கொடுக்க சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுவிட்டது தவெக அரசு.

முதலமைச்சராக விஜய்: இதனையடுத்து முதலமைச்சராக தனது பணிகளை முழுவீச்சில் செய்ய தொடங்கியிருக்கிறார் ஜோசப் விஜய். கடந்த திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்களை; எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்படுத்துவது, டாஸ்மாக் விஷயங்களில் அவர் காண்பிக்கும் கண்டிப்பு என ஒவ்வொன்றும் செய்தியாக மாறுகிறது. அதேசமயம் அத்தனையும் விளம்பர யுத்திதான் என்பது எதிர்க்கட்சியினரின் வாதமாக இருக்கிறது.
அடுத்தடுத்த சந்திப்புகள்: பல வருடங்கள் கழித்து திரைத்துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதனை நினைத்து அந்தத் துறையினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம் விஜய் இந்த அளவுக்கு வந்ததை ரஜினி விரும்பவில்லை என்ற பேச்சுக்களும் கிளம்பின. ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை. அவர் வெற்றி பெற்றவுடனேயே நான் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். அவர் மீது எனக்கு எந்த விதமான பொறாமையும் இல்லை என்பதையும் விளக்கி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது ஒருபக்கம் இருக்க திரைத்துறையிலிருந்து இதுவரை கமல்ஹாசன், நாசர், கார்த்தி, கருணாஸ், இயக்குநர் விக்ரமன், அவரது மகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தார்கள். விஜய்யை சந்தித்த அத்தனை பேருமே சொல்வது, 'அவரிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பல வருடங்களுக்கு முன்பு எங்களிடம் எப்படி கேஷுவலாக பேசினாரோ அதேபோல்தான் இருக்கிறார்' என புகழ்கிறார்கள். மேலும் தனது மனைவியை காப்பாற்றி தரும்படி முத்துக்காளை வைத்த கோரிக்கையும் சி.எம் காதுகளுக்கு சென்று உடனடியாக அமைச்சர் ராஜ்மோகனை அனுப்பி வைத்தார். இருப்பினும் முத்துக்காளையின் மனைவி உயிரிழந்துவிட்டார்.
அர்ஜுன் சந்திப்பு: இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை அர்ஜுன் நேரில் சந்தித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்களுடைய அன்புகிற்கினிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு; அதிக பொறுப்புகளை அழகாகவும், அமைதியாகவும் தாங்கி செல்லும் இந்தப் பயணத்தில் அவருக்கு வலிமை, நல்ல ஆரோக்கியம், சரியான வழிகாட்டுதால் எப்போதும் கிடைக்க வாழ்த்துகள்" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
