அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு!

By Shankar

சென்னை: நடிகர் அர்ஜுன் கட்டும் புதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு பக்கம் இருக்கும். திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் இருக்கிறார்.

ஆன்மீக அர்ஜுன்

ஆன்மீக அர்ஜுன்

அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது.

சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது 13 ஏக்கர் தோட்டத்தில், ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்டு அஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

35 அடி உயர சிலை

35 அடி உயர சிலை

35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப்பட்டது. அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.

இரும்புக் கோபுரம்

இரும்புக் கோபுரம்

அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. பெரிய கிரேன்களை வைத்து தூக்கி நிறுத்தினார்கள்.

தஞ்சை கோபுரம் மாதிரி

தஞ்சை கோபுரம் மாதிரி

தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிசேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அர்ஜுன் தெரிவித்தார்.

விரைவில் குடமுழுக்கு

விரைவில் குடமுழுக்கு

2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை செய்து கொண்டிருக்கிறோம் விரைவில் குடமுழுக்கு நடத்த உள்ளோம் என்றார் அர்ஜுன்.

நடிகை ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா

கோபுரம் நிர்மாணிப்பதை தொடர்ந்து விசேஷ பூஜை நடந்தது. இதில் நடிகர் அர்ஜுன் அவரது மகள் நடிகை ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். கோபுரத்தையும் சேர்த்து ஆஞ்சநேயர் கோவில் 40 அடி உயரத்தில் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X