சுதந்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் - வாழ்த்துக்கள்
Recommended Video
சென்னை: சுதந்திர தினத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதனால்தான் என்னவோ நடிகர் அர்ஜூன் தேசியக்கொடியை தன் கையில் பச்சை குத்தியுள்ளார்.
ஆக்சன் கிங் அர்ஜூன் நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சங்கர்குரு படம் தனி ரசிகர்களை பெற்றுத்தந்தது.

அர்ஜூன் பல படங்களில் நடித்திருந்தாலும் ஷங்கரின் ஜென்டில்மேன் படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்
அர்ஜூன் நடிப்பில் மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு போன்ற துறைகளிலும் திறமைக்கொண்டவர். அவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு நடிகர் புரூஸ்லியை பின்பற்றி, அவர் மாதிரி நடிக்க வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தார்.
ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைபிரியா நண்பர்கள். அர்ஜூன் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
அவர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிறந்ததினாலோ என்னவோ அவர் அரசியல், சமூகம் சார்ந்தும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களில் மட்டும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் எடுத்த ஜென்டில் மேன் திரைப்படத்தில் சமூகத்தின் மீது கோவப்பட்டு பழிவாங்கும் கதையில் நடித்திருப்பார்.
முதல்வன் திரைப்படம் பார்க்கும் பொழுது அது மாதிரி ஒரு முதல்வர் நாம் நாட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அளவுக்கு நடித்திருப்பார். அது மட்டுமின்றி அவர் நடித்த ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த் -2, நிபுணன், வானவில், செங்கோட்டை, மருதமலை போன்ற திரைபடங்களிலும் காவல்துறை அதிகாரியாகவும் கலெக்டராகவும் நடித்திருப்பார்.
ஹீரோவாக நடித்தவர்கள் வில்லன்களாக மாறும் காலம் இது. பல படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜூன் சமீபத்திய படங்களில் வில்லனாக நடித்தார். அதுவும் ரசிகர்களிடம் பெரும் வெற்றியை பெற்றது. இரும்புத்திரை,கொலைகாரன் மக்களிடையே வரவேற்பை பெற்றது. மீண்டும் இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜூனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications











