அம்மாடியோவ்... சர்வைவர் நிகழ்ச்சிக்காக நடிகர் அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் அர்ஜுன் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 90 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரூ. 1 கோடி பரிசு

ரூ. 1 கோடி பரிசு


90 நாட்கள் காட்டுக்குள் இருந்து கொடுக்கப்படும் டாஸ்க்களை சரியாக செய்து மக்களின் மனதில் இடம் பிடிப்பவர்கள் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக கருதப்படுவார்கள். வெற்றி பெறும் போட்டியாளருக்கு சர்வைவர் பட்டமும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும்.

தமிழில் முதல் முறையாக

தமிழில் முதல் முறையாக

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பெரும் ஹிட்டானது. இதுவரை 40 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சிக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தமிழில் முதல் முறையாக சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

தனித்தீவில் நடைபெறும் சர்வைவர்

தனித்தீவில் நடைபெறும் சர்வைவர்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காய்த்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி தனித்தீவில் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸுக்கு டஃப் கொடுக்கும்

பிக்பாஸுக்கு டஃப் கொடுக்கும்

நிகழ்ச்சியின் முதல் நாள் முதலே கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தலைவர் போட்டிக்கான டாஸ்க், சர்வைவல் டாஸ்க் என எடுத்த எடுப்பிலேயே ஆஹா போட வைத்துள்ளது சர்வைவர் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது இந்த சர்வைவர் நிகழ்ச்சி.

ஊதி பெரிதாக்கும் பார்வதி

ஊதி பெரிதாக்கும் பார்வதி

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் அதற்கு பெரும் தலைவலியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வைவர் நிகழ்ச்சியிலும் அட்டேன்ஷன் சீக்கர்ஸ் உள்ளனர். குறிப்பாக விஜே பார்வதி ஒன்றுமில்லாத விஷயம் உப்புச்சப்பில்லாத விஷயத்தை எல்லாம் ஊதி பெரிதாக்கி கவனத்தை பெற விரும்புகிறார்.

Recommended Video

Survivor Contestants PHONE use பண்றாங்களா? | தினமும் எப்படி Promotional Post
தொகுத்து வழங்கும் அர்ஜுன்

தொகுத்து வழங்கும் அர்ஜுன்

அதுவே அவருக்கு பேக் ஃபயராகிவிடும் என்பது தெரியவில்லை. இந்த சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். பாடி பில்டரான அர்ஜுன் இந்த சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஏக பொறுத்தமாக உள்ளது.

சர்வைவர் - அர்ஜுன் சம்பளம்

சர்வைவர் - அர்ஜுன் சம்பளம்

இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு அர்ஜுன் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அர்ஜுனுக்கு சர்வைவர் நிகழ்ச்சிக்காக மொத்தமாக 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அர்ஜுன் தயாரித்து அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் 'ஜீ தமிழ்' சேனல் வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X