அஜித்துக்கு வில்லனா நடிச்சு சம்பளம் குறைஞ்சது தான் மிச்சம்.. ஆனாலும், அர்ஜுனுக்கு நடந்த நல்ல விஷயம்!

சென்னை: இந்த ஆண்டு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர், தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து சீதா பயணம் எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "எந்த ஊரு போறடி பொண்ணே" பாடல் வெளியாகி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வில்லனாக நடிக்க அர்ஜுன் வாங்கிய சம்பளம் தற்போது திடீரென குறைந்து விட்டதாகவும், ஆனால், எல்லாம் நன்மைக்கே என்பது போல அதுவும் நல்ல விஷயம் தான் என்கிற தகவல் ஒன்று கோலிவுட்டில் கசிந்துள்ளது.

Arjun Sarja decreased his salary for his next movie due to this good reason

ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து கலக்கியுள்ள அர்ஜுன் மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தனது சம்பளத்தை சற்றே குறைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷங்கர் படங்களின் ஹீரோ: ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன், முதல்வன் படங்களில் பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கேம் சேஞ்சர் படத்துக்கு பதிலாக அர்ஜுனை வைத்து முதல்வன் 2 படத்தை இயக்கியிருந்தாலே ஷங்கருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என அந்த படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட அர்ஜுன் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

விடாமுயற்சி பட சம்பளம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அஜித்துக்கு 105 கோடி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு அடுத்தபடியாக அர்ஜுனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளத்தை லைகா நிறுவனம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், அடுத்த படத்துக்கு அர்ஜுனின் சம்பளம் சற்றே குறைந்துள்ளதாம்.

Arjun Sarja decreased his salary for his next movie due to this good reason

குறைந்த சம்பளம்: வில்லனாக நடித்த படங்கள் பெரிதாக நடிகர் அர்ஜுனுக்கு அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. மங்காத்தா படத்தில் அஜித்துடன் இன்னொரு ஹீரோவாகவே அர்ஜுன் நடித்திருப்பார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், மீண்டும் அர்ஜுன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபிராமி மற்றும் மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிக்க அர்ஜுனுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லாம் நன்மைக்கே: வில்லனாக நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அர்ஜுன் ஹீரோவாக நடிக்க 7 கோடி வாங்கினாலும், அதுவும் நன்மைக்குத்தான் என்றும் மீண்டும் அவர் ஹீரோவாக நடித்து படம் ஹிட் அடித்து விட்டால், அதன் பின்னர், இன்னொரு ரவுண்டு ஹீரோவாக அவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரும் என்கின்றனர். சின்ன கல்லு பெத்த லாபம் என்கிற ஃபார்முலாவை அர்ஜுன் அழகாக கடைபிடிக்கிறார் என்றும் ரொம்பவே உஷாரான ஆளு தான் என்றும் கூறுகின்றனர். தனது மகளை வைத்து அவர் இயக்கி வந்த சீதா ராமம் படமும் விரைவில் திரைக்கு வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X