ஹீரோ .. ஹீரோ ..

By Staff

தீவிரவாதிகள் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி எந்தப் பக்கம் போய் பதுங்கினாலும் அமெரிக்காவைப் போல, அசராமல் விரட்டிச்சென்று பிடித்து வருபவர்கள் விஜய்காந்தும், அர்ஜூனும்.

அந்த அளவுக்கு மகா கோபக்காரர்கள். இந்த இருவரது படங்களிலும் தமிழ் உணர்ச்சிப் பாடல்களும் நிச்சயம் இடம் பெறும். அட்லீஸ்ட்டைட்டில் சாங்கிலாவது வந்துவிடும்.

ஏ..பெண்ணே தமிழ்ப் பெண்ணே என்று பாடலில் கூட தமிழுக்காகவே வாழ்வார் அர்ஜூன். இது நல்ல விஷயம் தானே என்கிறீர்களா?.நிச்சயம் நல்ல விஷயம் தான்.

ஆனால், சமீபகாலமாக தான் நடிக்கும் தமிழ் படங்களில் எல்லாம் முடிந்தவரை கன்னட ஹீரோயின்களையே நடிக்க வைப்பதைபாலிஸியாக வைத்துக் கொண்டிக்கிறார். அது தான் இடிக்கிறது.

இப்போது பெரும்பாலான படங்களில் ஹீரோயின்கள் பெங்களூர், மும்பை வரவுகள் தான். இதில் அர்ஜூனை மட்டும் குறைசொல்லலாமா?. சொல்லலாம்.

ஏனென்றால், மற்ற படங்களில் புதுமுகங்களுக்காக கோ-ஆர்டினேட்டர்களிடம் சொல்லி, அவர்கள் எந்த ஊரில் இருந்து யாரை இழுத்துவந்தாலும், தங்களுக்குப் பிடித்துவிட்டால், ஓகே சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு யார், எந்த ஊராக இருந்தாலும் பிரச்சனையில்லை.

ஆனால், அர்ஜூனைப் பொறுத்தவரை சமீபகாலமாக தனது படங்களுக்கு கர்நாடகத்தில் தான் நடிகைகளையே தேடுகிறார் என்கிறார்கள்கோடம்பாக்கத்தில்.

சிம்ரன், லாரா தத்தா, மனீஷா கொய்ராலா, ரீமா சென் என்று பெரிய அளவில் ஹீரோயின்கள் அமையாவிட்டால் உடனே அடுத்தஆப்ஷனாக கர்நாடகத்தில் தான் நடிகைகளைத் தேடுகிறார்.

தானே தயாரித்தாலும் சரி, மற்றவர்கள் தயாரித்தாலும் சரி, பலனடைவது தன் ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது என்றுநினைக்கிறார் போலும்.

இவர் தயாரித்த வேதம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தது கர்நாடகத்தைச் சேர்ந்த சாக்ஷி.

சமீபத்தில் இவர் நடித்த கிரி படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தது ரம்யா. இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் தான்.

அடுத்து அர்ஜூன் நடிக்கப் போகும் படம் அகிம்சை. இதில் வழக்கம்போல் இவருக்கு இரட்டை ஹீரோயின்கள். இந்த இருவருமேகர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளார் அர்ஜூன்.

இதில் ஒரு ஹீரோயின் மைசூர்காரரான சங்கவி, இன்னொருவர் பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா!

பி.கு: கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கு 3 வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய தமிழ்ப் படங்கள்எதுவுமே அங்கே ரிலீசாகவில்லை!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X