ஷங்கர், கெனன் தி கிங் படத்தை என்னை வைத்து எடுக்கத் தயாரா? - சான்ஸ் கேட்ட அர்னால்ட்!
ஷங்கர், உங்க அடுத்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று வாய் திறந்து கேட்டார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர்.
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அர்னால்டிடம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்துக் கேட்டபோது, "இத்தனை ரசிகர்கள் இங்கு கூடியிருப்பதைப் பார்த்தாலே படத்தின் வெற்றி தெரிகிறது. திறமையான இந்தியர்கள் மத்தியில் நான் அமர்ந்திருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஷங்கரை நான் பாராட்டுகிறேன்," என்றார்.

பின்னர் மேடையில் அவர் பேசுகையில், "சென்னைக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு அழகான, அருமையான மக்கள் மிகுந்த நகருக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன். என் படங்களை இங்கு விநியோகித்த ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்காகத்தான் இங்கு வந்தேன். எனக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஷங்கரின் இந்தப் படம் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. இத்தனை பேருக்கு வாய்ப்புக் கொடுத்த ஷங்கர் எனக்கும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்..
இன்று நான் வந்தது ஐ பட விழாவில் கலந்துகொள்வதற்காக மட்டும் அல்ல.
டைரக்டர் ஷங்கர் உங்களிடம் நான் வேலைகேட்டு வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்க போகிறீர்கள். நான் ஷங்கர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். கெனன் தி கிங் என்ற படத்தை என்னை வைத்து எடுக்க தயாரா?" என்று ஷங்கரைப் பார்த்துக் கேட்க, அவரும் நிச்சயமாக என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.


Click it and Unblock the Notifications











