பேய் படத்தில் நடிக்கும் அருள்நிதி
கருணாநிதியின் பேரன் அருள்நிதி அடுத்தாக பேய் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் முதல்வாரத்தில் படம் தொடங்க உள்ளதாம்.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஜய் இயக்குநராக அறிமுகமாகிறார். தன்னுடைய பேய் கதைக்கு அருள்நிதிதான் சரியான நபராக இருப்பார் என்று தோன்றியதால் அவரிடம் கதை கூறியதாக இயக்குநர் அஜய் தெரிவித்துள்ளார்.
சென்னையிலும், குளுகுளு கூர்க் மாவட்டத்திலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.
ஹீரோ மட்டுமே தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.ஹீரோயின் இசையமைப்பாளர் இதர நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் யார் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்கிறார் இயக்குநர் அஜய்.
வம்சம், தகராறு என்று அரிவாள் பிடித்த அருள்நிதி பேய் படத்திலும் அரிவாள் பிடிப்பாரோ?
Comments


Click it and Unblock the Notifications