உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரில் கதை... அருள்நிதியின் அடுத்த படம்

Recommended Video

Actor Arulnithi Exclusive: என் கூட சேர்ந்து சீனு ராமசாமியும் திரில்லர் படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு

சென்னை: மவுன குரு, டிமாண்டி காலனி, கே 13 என தொடர்ந்து திகில் திரில் மர்மம் நிறைந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கப்போகிறார். இந்தப்படத்தின் கதை உண்மை சம்பவத்துடன் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் கதைக்களம் வேற எந்த ஒரு திரைப்படத்திலும் வந்ததில்லை என்று இயக்குநர் இன்னாசி பாண்டியன் கூறியுள்ளார்.

அருள் நிதி திரையுலகில் அறிமுகமான முதல் படம் வம்சம் திரைப்படத்தில் தொடங்கி அனைத்து படங்களையுமே நன்கு அலசி ஆராய்ந்து, சிறப்பாக தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தோடு நடித்து வருகிறார். இதன் காரணமாகவே, இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Arulnithi’s new movie is a fantasy movie

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள் நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் கே 13. அருள் நிதி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சிறப்பான நடிப்பு, திரில்லர் படத்திற்கேற்ற பின்னணி இசை, தெளிவான ஒளிப்பதிவு, ட்விஸ்ட்டான கிளைமாக்ஸ் போன்றவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது, இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் கே 13 படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து களத்தில் இறங்குவோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள் நிதி தற்போது, புதுமுக இயக்குனரான இன்னாசி பாண்டியன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் பிரதான காட்சிகள் அனைத்தையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். சுமார் 40 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

உண்மையில் நடந்த சம்பவத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து இப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் கதைக்களம் வேறு எந்த ஒரு படத்திலும் இதுவரையில் வந்ததில்லை, என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர் பட குழுவினர்.

அருள் நிதி நடித்த டிமான்டி காலனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக கால் பதித்தவர் அஜய் ஞானமுத்து. அவரிடம் துணை இயக்குனராக பணி புரிந்தவர் தான் இன்னாசி பாண்டியன். குருநாதர் அஜய் ஞானமுத்து தனது சிஷ்யரான இன்னாசி பாண்டியனுக்கும் அவரது படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X