கரு கலைந்ததற்கு டிவிகே தான் காரணமா? நாடகத்தை நிறுத்துங்க.. ஜூலியை ஓடவிட்ட நடிகர்!

சென்னை: கமிஷனர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிக் பாஸ் ஜூலி, டிவிகேவை எதிர்த்ததற்காக தன்னை பெண் என்றும் பாராமல், ஆபாசமாகவும், அசிங்கமாகவும் விமர்சித்தனர். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், மன அழுத்தத்தின் காரணமாக கருசிதைவு ஏற்பட்டது, நான் என் குழந்தையை இழந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

ஜூலியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் அருண்ராஜன் பதிலளித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்ன பேசுகிறீர்கள் ஜூலி? டிவிகேவால் தான் உங்களுடைய கரு கலைந்ததா? நாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம்? டிவிகேவையும் அதன் தலைவரையும் எதிர்த்து பேசிய ஒரே பெண் நீங்க மட்டும் அல்ல, பல பெண்கள் டிவிகேவையும், அண்ணன் விஜயையும் விமர்சித்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நாங்கள் கருத்து ரீதியாகத்தான் பதிலளித்தோம்.

Julie TVK Arun Rajan
Photo Credit:

நடிகர் அருண்: ஆனால், ஜூலி நீங்க கெஞ்சம் நெஞ்சமாகவா பேசினீங்க, நீங்க பேசிய கருத்துக்கள் சாதாரணமானது இல்லை. நீங்க என்ன நினைத்துக்கொண்டு இருக்குறீர்கள் எங்களுக்கு எல்லாம் கமிஷனர் அலுவலகம் தெரியாதா? நீங்கள் எட்டு பேர் மீது புகார் கொடுத்தீங்க, அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னால் உங்கள் மீது வழக்கு போட முடியாதா? செய்தியாளர்களை சந்தித்து உங்களை கேள்வி கேட்டு, உங்களை சந்தி சிரிக்க வைக்க என்னால் முடியாதா? எங்களுக்கும் எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எனக்கு தெரியும். நீங்கள் ஆனால், பெண் இப்போது தான் திருமணம் நடந்து இருக்கு என்பதற்காகத்தான் உங்களை யோசித்து நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.

இதோடு நிறுத்திக்கோங்க: இந்தோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க, எல்லாத்தையும் பேசிவிட்டு பெண்கள் என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு டிவிகேவினர் பெண்களை ஆபாசமாக பேசுகிறார்கள் என்று கூற வேண்டாம். நீங்கள் பேசிய சில கருத்துக்களால், பல குடும்பங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளை மனதளவில் பாதிக்கப்பட்டார்கள். இறுதியாக, உங்களுடைய நாடகத்தை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் சட்ட ரீதியாக சந்திக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நடிகர் அருண்ராஜன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். ஜூலி மற்றும் நடிகர் அருண் இடையேயான இந்த வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Read more about: julie tvk ஜூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X