விஜயகுமார் தயாரிக்கும் படத்தில் காக்கிச்சட்டை போடும் அருண் விஜய்

சென்னை: நடிகர் விஜயகுமார் எ மூவிங் ஸ்லைட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக அருண் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பிரபாஸுடன் இணைந்து நடித்த சாஹோ திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பல படங்களில் அருண் விஜய் நடித்து முடித்துள்ளார் அவை வெளியாகும் தருவாயில் உள்ளன.

Arun Vijay Acts as a Police Officer in Own Production

குத்துசண்டை வீரராக பாக்ஸர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில், லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஃபியா. பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரு கேங்ஸ்டர் பற்றின கதை.

மேலும் விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார் அருண் விஜய். இப்படமும் வெளியாக தயாரான நிலையில் உள்ளது. இப்படி அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் நிலையில் தனது அப்பா விஜயகுமார் தொடங்கியுள்ள எ மூவிங் ஸ்லைட்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்கப்போகிறாராம். குற்றம் 23 படத்திற்குப் பிறகு, அருண் விஜய் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

சகா படத்தின் இசையமைப்பாளர் சபீர் இசையமைப்பில், யுவன் யுவதி, நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ், வாகா போன்ற பல படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேல் இப்படத்தையும் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அருண் விஜய் நல்ல திறமையான நடிகர் தான். ஆனால் ஏனோ அவரது படங்களை பெரிதாக வெற்றி பெறுவதில்லை. ஆனால் தடம் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. போலீஸ் கதாபாத்திரம் அருண் விஜய்க்கு நல்ல பொருத்தமாகவும் கம்பீராகவும் இருக்கும். இப்படத்திலும் அந்த கம்பீரமும், வெற்றியும் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X