Arun Vijay Networth: 47வது பிறந்தநாளை கொண்டாடும் அருண் விஜய்.. வயசை விட டபுள் மடங்கு சொத்து இருக்கா?
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கும் முத்துக்கண்ணுவுக்கும் மகனாக 1977ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி சென்னையில் பிறந்த அருண் குமார் தமிழ் சினிமாவில் சுந்தர். சி இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரியம், காத்திருந்த காதல், கங்கா கெளரி, துள்ளி திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன் என பல படங்களில் நடித்தாலும் பாண்டவர் பூமி திரைப்படம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன் பின்னரும் அவர் நடித்த பல படங்கள் சரியாக போகவில்லை.

அருண் விஜய் என பெயரை மாற்றிக் கொண்ட2015ம் ஆண்டு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மாறி மிரள வைத்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. பிரபாஸுக்கு வில்லனாக சாஹோ படத்திலும் நடித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் திரைப்படம் அருண் விஜய்க்கு மெகா ஹிட் படமாக மாறியது. அருண் விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு, குடும்ப வாழ்க்கை வரவிருக்கும் படங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஹேப்பி பர்த்டே அருண் விஜய்: அப்பா விஜயகுமாரை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் நினைத்த அருண் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 47வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார் அருண் விஜய். ஒவ்வொரு வருடமும் இதனை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வணங்கான் வருது: இந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியானது. ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் அந்த படத்தை பாராட்டினர். ஆனால், தியேட்டருக்குச் சென்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வராத நிலையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை குறி வைத்திருக்கிறார் அருண் விஜய். பாலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் பொங்கல் தேதியை குறிவைத்து இருக்கும் நிலையில், அருண் விஜய்யும் களத்தில் குதித்துள்ளார்.

சொத்து மதிப்பு: கடந்த 2006ம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் அருண் விஜய். அவருக்கு பூர்வி மற்றும் அர்னவ் என ஒரு ஆண் குழந்தையும் ஒரு மகளும் உள்ளனர். ஒரு படத்துக்கு அருண் விஜய் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு 85 கோடி முதல் 92 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. In Cinemas Entertainment எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் வேறு சில தொழில்களையும் அருண் விஜய் பார்த்து வருகிறார். அருண் விஜய்யின் மனைவியின் அப்பா என்.எஸ். மோகனும் தயாரிப்பாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா வேண்டாம் என விலகிய வணங்கான் படத்தில் நடிக்க சம்மதித்து கஷ்டப்பட்டு நடித்துள்ள அருண் விஜய்க்கு வரும் ஆண்டாவது வெற்றியாண்டாக மாறட்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











