அருண் விஜய்க்கு அக்கா மகள் சொன்ன ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : நடிகர் அருண் விஜய் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார்

முதல் முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் திரைப்படத்திற்கு யானை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அக்னி சிறகுகள், பாக்சர், சினம், யானை, பார்டர் என கை நிறைய படங்களில் நடித்து வரும் அருண் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரது அக்கா மகள் தியா ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

முதல்முறையாக இணைந்து யானை படத்தில்

முதல்முறையாக இணைந்து யானை படத்தில்

விக்ரம், சூர்யா, விஷால் என பலர் இப்பொழுது முன்னணி நடிகராக திகழ்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பல பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் அருண்விஜய் ஹரிக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் இருவரும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர் இந்த நிலையில் இப்பொழுது முதல்முறையாக இணைந்து யானை என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர்

அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார்

அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார்

முற்றிலும் கிராமத்து கதை களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் படம் முழுவதும் அருண் விஜய் வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வருகிறார் . இப்படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். குடும்பப் பின்னணி கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யானை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

ராணுவ வீரராக

ராணுவ வீரராக

குற்றம் 23 வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார். அனைத்து கட்ட பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Recommended Video

Wife அ விட்டுக்கொடுக்க முடியாது but இவங்க தான் எல்லாம் | Arun Vijay speech | Filmibeat Tamil
அக்கா மகள் தியா ஸ்பெஷல் வாழ்த்து

அக்கா மகள் தியா ஸ்பெஷல் வாழ்த்து

அருண் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தி வெற்றி பெற்று வரும் சூழலில் தமிழ் சினிமாவில் இப்போது தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அக்னிசிறகுகள், சினம், பார்டர்,யானை, ஓ மை டாக் என படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடியதை முன்னிட்டு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்க இவரின் அக்கா மகள் தியா அருண் விஜய்யுடன் உள்ள ஸ்பெஷல் க்யூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X