வணங்கான்.. 20 வருஷம் கழிச்சு பேசுவாங்க பாருங்க.. ஒரே ஒரு வருத்தம் இருக்கு.. அருண் விஜய் ஓபன் டாக்

சென்னை: விஜயகுமாரின் மகனான அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது அவருக்கு தொடர்ந்து படங்கள் வந்துகொண்டிருந்தாலும் பெற்றி வெற்றி வராமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் ரெட்ட தல படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த வாரம் படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி கவனத்தை ஈர்த்த்ரிஉக்கிறது.

கோலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். அவர்களில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய் 90களிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டார். தந்தை மாதிரியே பெரிய நடிகராக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு அது நிறைவேறவில்லை. தொடர்ந்து அவர் பல படங்களில் ஹீரோவாக சளைக்காமல் நடித்தாலும் திருப்புமுனை எதுவும் கிடைக்கவே இல்லை.

Arun Vijay Opens Up About Failures and Hopes Ahead of Retta Thala Release
Photo Credit:

பாலாவின் வணங்கான்: சூழல் இப்படி இருக்க தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தார். முதலில் இப்படத்தில் சூர்யா நடித்திருக்க வேண்டியது. சில காரணங்களால் அவர் வெளியேற அருண் விஜய் உள்ளே வந்தார். மிஷ்கின், சமுத்திரகனி என பலர் நடித்திருந்த இப்படம் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.

அருண் விஜய்க்கு நல்ல பெயர்: அதேசமயம் அருண் விஜய் நடிப்பில் மிரட்டியிருந்தார். மாற்று திறனாளியாக படம் முழுக்க பேசாமல் சைகையிலேயே பேசி நடித்து அசத்தியிருந்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் வெறும் பாராட்டு மட்டும்தான் கிடைத்தது. வணிக ரீதியான பெரிய வெற்றியை படம் பெறாததால் படக்குழு ரொம்பவே அப்செட்டானது. முக்கியமாக தனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே என்பது அருணுக்கும் கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.

ரெட்ட தல: அதற்கடுத்து தனுஷ் இயக்கிய இட்லி கடை படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். வழக்கம்போல் நடிப்புக்கு அப்ளாஸ் கிடைத்தது. இப்போது ரெட்ட தல படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.

அருண் விஜய் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "யானை படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிதான். இப்போதும் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நான் செல்லும்போது யானை படத்தை பற்றி பேசுவார்கள். பாலாவின் இயக்கத்தில் நடித்த வணங்கான் ஒரு நடிகனாக எனக்கு திருப்தி கொடுத்த படம். 20 வருடங்கள் கழித்து பார்த்தாலும் பேசாமலேயே பின்னியிருக்கான் யா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் அது வணிக ரீதியாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். அது நடக்காமல் போனது வருத்தம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X