கட்டுக்கோப்பான உடல் அழகு.. இரவிலும் ஒர்க் அவுட்.. அருண் விஜயின் 6 பேக்!

சென்னை : அருண் விஜய் பகலில் மட்டுமின்றி இரவிலும் வொர்க் அவுட் செய்து வருகிறார். சிக்ஸ் பேக்குடனும் போஸ் கொடுக்கும் போட்டோக்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி என்ற கனியை எட்ட வேண்டும் எனில் துன்பங்கள், தோல்விகள், அவமானங்கள் போன்ற கிளைகளை நாம் வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும். இதே போல் தான் அனைத்து துறைகளிலும் பல சாதனையாளர்கள் தங்களின் சாதனையை புரிந்துள்ளனர். நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களின் ஆரம்ப காலங்களில் மக்களால் எற்றுகொள்ளபடாமல் பின் கடின உழைப்பால் பலரின் மனதிலும் இடம் பிடித்தவர்கள் உள்ளனர்.

 Arun Vijay posted with the Six pack photos on the social media

அதற்கு சிறந்த உதாரணம் தளபதி விஜய் அவர்கள். தனது தந்தை மூலம் சினிமாவில் வந்தாலும் தன் திரையுலக பயணத்தின் தொடக்கத்தில் அவர் பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்தவர். ஆனால் தன் கடின உழைப்பால் தற்போது பலராலும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நிலைக்கு வளர்ந்துள்ளார். அதே போல்தான் நடிகர் அருண் விஜய் அவர்களும் தன் அப்பா விஜயகுமார் மூலம் தமிழ் சினிமாவில் வந்தார்.

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆனால் அவர்களை போல பெரிதும் இவர் பேசப்படவில்லை பாண்டவர் பூமி, தவம் போன்ற படங்களில் மக்களின் மனதில் தெரிந்தவராக இடம் பிடித்தாலும் பெரிதும் பேசப்படவில்லை. அதன் பின் மாஞ்சா வேலு, மலை மலை போன்ற படங்களில் நடித்து ஓரளவு பிரபலமானார். தடையற தாக்க திரைப்படம் இவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லாம்.

 Arun Vijay posted with the Six pack photos on the social media

அதன் பின் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இவரின் பல ஆண்டு கால உழைப்பிற்கு ஆறுதல் தந்தது. தொடர்ந்து குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாபியா போன்ற வெற்றி படங்களை கொடுத்து பல ஆண்டுகள் கழித்து தான் விரும்பிய இடத்தை அடைந்தார். இவரின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவரின் உடல் கட்டமைப்பும் கடினயான உடற்பயிற்சிதான்.

 Arun Vijay posted with the Six pack photos on the social media

தற்போது லாக்டவுன் காரணத்தால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் குடும்பத்துடன் இருக்கும் நிலையில் அருண் விஜய் பகல் மட்டுமின்றி இரவிலும் வொர்க் அவுட் செய்து வருகிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் சாதனங்களையும், பின் தன் சிக்ஸ் பேக்குடனும் போஸ் கொடுக்கும் போடோக்களையும் பதிவிட்டுள்ளார்.பலரும் இதை லைக் செய்துள்ளனர்.

மாபியா படத்தை தொடர்ந்து பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற படங்களில் இவர் நடித்துவருகிறார். என்னதான் அப்பாவின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் வெற்றிக்கு தங்களின் உழைப்புதான் காரணம் என்பதை நிரூபித்த நடிகர்களில் அருண் விஜயும் ஒருவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X